ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறதா! 500 டன் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக அரசுக்கு வழங்க தயார்.

ஒரு நாளைக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக அரசுக்கு வழங்க தயார்.
“ஸ்டெர்லைட் நிறுவனம்”

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால், கொரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. கொரோனா பரவல் அதிகமாகிவருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஒரு வார முழு ஊரடங்கை அறிவித்துள்ளன.

உலகெங்கும் கரொனா வைரஸால் ஆக்ஸிஜன் பற்றாக் குறையும் நிலவி வருகிறது. முக்கியமாக இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அந் நிறுவனத்தை திறக்க மத்திய அரசு முயன்று வருகிறது. மேலும் ஸ்டெர்லைட் நிறுவனம் இயங்கினால் அதை சுற்றியுள்ள மக்களுக்கு மூச்சு தினறல் ஏற்படுகிறது என்ற குற்றச் சாட்டு வைக்கப்பட்டது.
ஆனால் மாசு கட்டுப்பாடுடன் ஒப்பிடுகையில் தூத்துக்குடியில் காற்று மாசு குறைவாகவே உள்ளது என ஒரு ஆய்வும் கூறுகின்றது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நாள் ஒன்றுக்கு 1,050 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனுடைய உற்பத்திக்கூடத்தில் தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 500 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து இலவசமாக அனுப்ப தயாராக இருக்கிறோம் என வேதாந்த குழுமம் அறிவித்துள்ளது.

ஆனால் இப்பொழது கரொனா வைரஸால் ஆக்சிஜன் இல்லாமல் மூச்சே நிற்கும் நிலை உள்ளதால் உடனடியாக பொதுமக்களின் நலன் கருதி ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும். என்ற கோரிக்கை எழுந்து வருவது குறிப்பிட தக்கது.

Exit mobile version