ஹமாஸ் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேலை எதிர்த்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார், இந்த நிலையில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் இன்று ஹமாஸுக்கு ஆதரவாக களமிறங்கினர். அறிக்கைகளின்படி, AMU மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலின் பதிலடி இராணுவ நடவடிக்கையை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் அல்லா-உ-அக்பர் மற்றும் லா இலாஹா இல்லல்லாஹ் போன்ற இஸ்லாமிய கோஷங்களுடன், இஸ்ரேலுக்கு எதிரான மற்றும் பாலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பினர். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் அட்டூழியங்களைச் செய்வதாகக் கூறி, உலகில் எங்கும் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பினர்.

மேலும் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் அல்லா-உ-அக்பர் முழக்கங்களை எழுப்பினர், மேலும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். பாலஸ்தீனத்துடன் AMU ஸ்டாண்ட், ஃப்ரீ பாலஸ்தீனம், இந்த நிலம் பாலஸ்தீனம், இஸ்ரேல் அல்ல’ என்று ஒரு அட்டையில் எழுதப்பட்டிருந்தது.

இது ஆரம்பம் தான் இனி இது மாதிரியான நிகழ்வுகள்இந்தியாவில் நிகழ வாய்ப்புகள் இருக்கிறது.இஸ்ரேலின் பாலஸ்தீனத்தி ன் மீதான தாக்குதல் அவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விடாது.ஹமாஸ் ஈரான் உதவியுடன் மிக வலிமையாக இப்பொழுது இருக்கிறது. அதனால் தான் நேற்றைய ஹமாஸின் தாக்குதல் அதன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற் கு மிக வலிமையாக இருந்தது

1973 ல் நடைபெற்ற நான்காவது இஸ்ரேல் அரபு போர் என்கிற யோம் கிப்பூர் போரில் இஸ்ரேலிய படைகள் எகிப்து சிரியா ஜோர்டான் நாடுகளுடன் நடத்தியபோரில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுஅதற்கு பிறகு இப்பொழுது தான் இஸ்ரேல் அரசு முதல் முறையாக ஹமாஸ் உடன் போர் என்று அறிவித்து இருக்கிறது

இது வரை இஸ்ரேல் ராணுவ ம் ஹமாஸ் உடன் பல முறைசண்டைகள் நடத்தி இருக்கின்றன.ஆனால் அவை அனைத்தும்வெறும் தாக்குதல் என்கிற அளவிலேயே நடந்து முடிந்தன.இப்பொழுது தான் இஸ்ரேல் ஹமாஸ் உடன் முதல் முறை யாக போரை அறிவித்து இருக்கிறது.இதனால் ஹமாஸ்க்கு துணையாக பல நாடுகள் வரலாம்.

இதனால் ஹமாஸ் உடன் இஸ்ரேல் நடத்தும் போர் அவ்வளவு சீக்கிரம் முடியாது என்பதால் இதன் எதிரொலியாக முஸ்லி ம்கள் அலிகார் யுனிவர்சிட்டி மாணவர்கள் மாதிரியே ஹமாஸ்க்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வாய்ப்புகள் இருக்கிறது இதனால் நடுநிலை இந்தியர்களையும் முஸ்லிம் அமைப்பு களின் செயல்கள் எரிச்சல் அடைய வைத்து மோடியை நோக்கி கொண்டு செல்லும்.

இன்றைய இந்தியா மிகவும் வலி மையாக இருப்பதற்கு காரண மான மோடியை நோக்கி சாதாரண வாக்காளர்களையும் கொண்டு செல்ல இருக்கிறதுஇந்த இஸ்ரேல் ஹமாஸ் போர்.2024 லோக்சபா தேர்தலில்
வலிமையான ஆட்சியை இந்தியர்கள் மீண்டும் அமோக ஆதரவுடன் தேர்வு செய்ய துணை இருக்கப்போவது இஸ்ரேல் ஹமாஸ் போரை முன்வைத் து இந்தியாவில் உருவாகும் இது மாதிரியான போராட்டங்களே காரணமாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

Exit mobile version