திடீர் திருப்பம் 2 ஜி வழக்கில் சிக்கிய புதிய ஆதாரம் ! நீலகிரி தூத்துக்குடிக்கு இடைத்தேர்தலா?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற நடைமுறையை கடைபிடித்ததால் ரூ1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது என 2010-ம் ஆண்டு மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய். அறிக்கை தாக்கல் செய்தார் இது நாடு முழுவதும் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியது.

2011-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கைது செய்யப்பட்டனர். மே மாதம் திமுகவின் கனிமொழியும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார். 2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாக, கனிமொழி இயக்குநராக இருந்த கலைஞர் டிவிக்கு பணம் பெறப்பட்டது என்பது குற்றச்சாட்டு.

இந்த நிலையில் உலகம் முழுவதும் ஐ.சி.ஐ.ஜே., எனும் வங்கிகள் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு, உலகமெங்கும் நடக்கும் மோசடி மற்றும் ஊழல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த வருடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கிகளில் சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனை தொடர்பான விசாரணை அமைக்கப்பட்டது இந்த விசாரணையின் மூலம் இத்தியாவையே உலுக்கும் மிகப் பெரிய மோசடி தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

இதில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நடத்தியுள்ள, 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட, மூவாயிரம் பரிவர்த்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பணபரிவர்தனையில் நாட்டையே உலுக்கிய, ‘2ஜி’ அலைக்கற்றை மோசடி உள்ளிட்ட வழக்குகளும் இதில் தொடர்புள்ளவை என்பதும், பயங்கரவாதம் மற்றும் போதைக்கடத்தலுக்கும் பணம் சப்ளை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த, 2013ல், ‘ஆப்ஷோர் லீக்ஸ்’ என்ற பெயரில், வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.

இவ்வாறு, 1999 முதல் 2017 காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட, லட்சக்கணக்கான, சந்தேகப் பரிவர்த்தனை அறிக்கைகள், ஐ.சி.ஐ.ஜே. அமைப்புச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு கிடைத்துள்ளன. அவற்றின் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக புலனாய்வு செய்யப்பட்டு, நடந்துள்ள மிகப் பெரிய மோசடிகள் தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த, பணம் அனுப்பியவர், வங்கி மற்றும் பயனாளியின் பெயர் மற்றும் விலாசம் உள்ள, 3,201 பரிவர்த்தனை அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு மட்டும், 11 ஆயிரத்து, 248 கோடி ரூபாயாகும்.இந்த அறிக்கைகள், ‘பின்சென்’ அமைப்பு எழுப்பியுள்ள எச்சரிக்கை மணி தான்.

இவை தொடர்பாக மேலும் விசாரணை நடத்தினால், புதுபுது பூதங்கள் கிளம்பலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வரும் பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பான தகவல்களும், இந்த அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ‘2ஜி’ அலைக்கற்றை மோசடி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மோசடி, ரோல்ஸ் ராய்ஸ் ஊழல், ஏர்செல் – மேக்சிஸ் மோசடி என, விசாரணையில் உள்ள பல்வேறு வழக்குகள் தொடர்பான தகவல்களையும், ‘பின்சென்’ அமைப்பு சேகரித்துள்ளது.

இந்த ஊழல் வழக்குகளில், பல மோசடி மற்றும் சந்தேகப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது உறுதியாகி உள்ளது. தொடர் விசாரணை நடத்துவதற்கு, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு இந்த தகவல்கள் பெரிதும் உதவக்கூடும்.மேலும், இந்த மோசடிகளில், பல்வேறு பிரபலங்கள் பெயர் சிக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

2ஜி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, ராஜா, கனிமொழி மற்றும், 17 பேரை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2017, டிசம்பர் 21ல் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, 2018, மார்ச், 19ல், அமலாக்கத் துறை, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மறுநாள், சி.பி.ஐ.,யும் மேல்முறையீடு செய்தது. இந்த மனுக்களின் விசாரணை, வரும், அக்டோபர் 12ல் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த அறிக்கை கனிமொழி ராசாவுக்கு எதிராக கிடைத்திருப்பதால் இதன ஆதாரங்களை திரட்ட சிபிஐ முடிவு செய்துள்ளது. இது கனிமொழி ராசாவுக்கு பின்னடைவு ஆகும்.

இந்த வழக்கை விசாரித்து வரும், நீதிபதி சேதி, நவம்பர் 30 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். அதற்குள் விசாரணையை முடிக்க வேண்டும். இல்லையெனில், புதிய அமர்வு துவக்கத்தில் இருந்து விசாரிக்க நேரும். எனவே, மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும். என அவர் கூறினார். விசாரணை நவம்பரில் முடிந்தாலும் அதன் தீர்ப்பு என்பது எப்போது வெளிவரும் என்பது தெரியாது. இது 2021 தேர்தலுக்கு பயன்படும் என்பது மட்டுமே தெரிந்த உண்மை! ! நீலகிரி தூத்துக்குடிக்கு இடைத்தேர்தலா? என்ற கேள்வியும் நம்மில் எழுந்துள்ளது.

மோசடியை கண்டுபிடித்தது எப்படி?
அமெரிக்காவில் செயல்படும் வங்கிகள், சந்தேகத்துக்கு உரிய பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை, நிதித் துறையின் கீழுள்ள, ‘பின்சென்’ என்றழைக்கப்படும், நிதி குற்றங்கள் அமலாக்க பிரிவுக்கு அறிக்கையாக தர வேண்டும். பரிவர்த்தனை நடந்து, 30 நாட்களுக்குள், அது தொடர்பான தகவல்களை தராவிட்டால், வங்கிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். நம் நாட்டிலும், நிதி புலனாய்வு பிரிவு, இது போன்ற பணியை செய்கிறது.பண மோசடி, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பது, போதைப் பொருள் கடத்தலுக்கு உதவி போன்றவற்றை தடுப்பதற்காகவே, இந்த அறிக்கை பெறப்படுகிறது.

இது வங்கிகள் அளிக்கும் அறிக்கைதான். அதாவது, சந்தேகம் உள்ளது என்ற தகவலை மட்டுமே அளிக்கும். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதே நேரத்தில், இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ‘பின்சென்’ நிறுவனத்துக்கு, வங்கிகள் அளித்த ஆயிரக்கணக்கான அறிக்கைகள், ஐ.சி.ஐ.ஜே., அமைப்புக்கு கிடைத்தது. அதனடிப்படையில் புலனாய்வு நடத்தப்பட்டு, கோடிக் கணக்கில் நடந்துள்ள மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version