உயிர் காத்த உதான் விமானங்கள் !

கோவிட் 19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் உயிர்காக்கும் உதான் விமானங்கள் 2,87,061 கிலோமீட்டர் தூரம் பயணம் நாட்டின் வட கிழக்குப்பகுதிகள் ஜம்மு காஷ்மீர் லடாக் மற்றுமுள்ள தீவுப்பகுதிகளுக்கு பவன் ஹன்ஸ் உட்பட ஹெலிகாப்டர் சேவைகள் மூலம் அவசர மருந்துப் பொருள்களும், நோயாளிகளும் ஏற்றிச் செல்லப்பட்டனர்

உயிர்காக்கும் உதான் விமானச் சேவை சேவையின் கீழ் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் மூலமாக 288 விமானங்கள் இயக்கப்பட்டன. இவற்றுள் 180 விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்களால் இயக்கப்பட்டன. இதுநாள் வரை 479.55 டன் பொருள்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன. இதுநாள் வரை உயிர்காக்கும் உதான் விமானங்கள் மூலமாக 287061 கிலோமீட்டர் வான் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்க்கு எதிராக இந்தியா தொடுத்துவரும் போருக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில், நாட்டின் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளுக்கு அத்தியாவசியமான மருந்துப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.

18 ஏப்ரல் 2020 அன்றுவரை பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர்கள் மூலம் 1.86 டன் சரக்கு 6265 கிலோமீட்டர் தூரம் பயணித்து எடுத்துச் செல்லப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் தீவுகள் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இயங்கும் பவன் ஹன்ஸ் நிறுவன ஹெலிகாப்டர் சேவைகள் உட்பட ஹெலிகாப்டர் மூலமாக மிக அவசிய தேவையான மருந்துப் பொருள்களும், நோயாளிகளும் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

கோவிட்-19 நோய் தொடர்பான ரீஏஜென்ட்கள், என்சைம்கள், மருத்துவ உபகரணங்கள், கோவிட்-19 நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை உபகரணங்கள், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், கவசங்கள், கையுறைகள், HLL மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இதர பொருள்கள், மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் கேட்டுக்கொண்ட பொருள்கள், அஞ்சல் பொட்டலங்கள் உட்பட பல பொருள்களை உள்நாட்டு உயிர்காக்கும் உதான் விமானங்கள் ஏற்றிச் சென்றன.

வடகிழக்குப்பகுதி, தீவுப்பகுதிகள் ,மலைப்பாங்கான மாநிலங்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. முதன்மையாக ஜம்மு காஷ்மீர், லடாக், வடகிழக்கு மற்றும் இதர பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு ஏர் இந்தியாவும் இந்திய விமானப் படையும் இணைந்து பங்காற்றின. உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து விமான நிறுவனங்களான ஸ்பைஸ் ஜெட், ப்ளூ டார்ட் மற்றும் இண்டிகோ விமானங்கள் வர்த்தக ரீதியில் சரக்குப் போக்குவரத்து விமானங்களை இயக்கி வருகின்றன. 24 மார்ச் 2020 முதல் 18 ஏப்ரல் 2020 வரையிலான காலத்தில் ஸ்பைஸ் ஜெட் சரக்கு விமானங்கள் 600261 கிலோமீட்டர் பயணித்து 410 சரக்கு விமானங்கள் மூலம் 3270 டன் சரக்குப்போக்குவரத்தைக் கையாண்டது. இவற்றுள் 128 விமானங்கள் சர்வதேச சரக்குப் போக்குவரத்து விமானங்களாகும். ப்ளூ டார்ட் நிறுவனம் 25 மார்ச் 2020 முதல் 18 ஏப்ரல் 2020 வரையிலான காலத்தில் 141 உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து விமானங்கள் மூலம் 139179 கிலோமீட்டர் பயணித்து 2241 டன் சரக்கைக் கையாண்டது. 3 ஏப்ரல் 2020 முதல் 18 ஏப்ரல் 2020 வரையிலான காலத்தில், இண்டிகோ 31 சரக்கு விமானங்கள் மூலம் 32290 கிலோமீட்டர் பயணித்து 48 டன் சரக்குப்போக்குவரத்தைக் கையாண்டது. அரசுக்காக இலவசமாக ஏற்றிச் செல்லப்பட்ட மருந்து பொருள்களும் இதில் அடங்கும்.

7 ஏப்ரல் 2020 அன்று தெற்காசியாவிலும், 8 ஏப்ரல் 2020 அன்று, கொழும்பிற்கும் சுமார் 9 டன் பொருள்கள் சரக்குப் போக்குவரத்தை ஏர் இந்தியா கையாண்டது. கிருஷி உதான் திட்டத்தின் கீழ் சென்றவாரம் மும்பை – ஃப்ராங்க்ஃபர்ட் மற்றும் மும்பை – இலண்டனுக்கு இடையே ஏர் இந்தியா இரண்டு விமானங்களை இயக்கியது. பருவகாலப் பழங்கள் மற்றும் காய்கறிகள் மும்பையிலிருந்து ஏற்றிச் செல்லப்பட்டன. திரும்பி வருகையில் பொது சரக்குகள் ஏற்றிக் கொண்டு வரப்பட்டன. 15 ஏப்ரல் 2020 அன்று தில்லி- செசல்ஸ்- மொரீசியஸ் -தில்லி வழித்தடத்தில் மருத்துவப் பொருள்களை ஏற்றிக் சென்ற மற்றொரு விமானம் ஏர் இந்தியாவால் இயக்கப்பட்டது.

Exit mobile version