தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தகுதியுடைய ரேசன் அட்டைதாரர்கள்/பயனாளிகளுக்கும் அவர்களுக்கு உரித்தான பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதற்காக ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்துவது இந்திய அரசின் உணவு & பொது விநியோகத் துறையின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ், மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பொருத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை நிறுவுவது, பயனாளிகளின் ஆதார் எண்களை அவர்களின் குடும்ப அட்டைகளோடு இணைப்பது மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உயிரி அடையாளத் தொழில்நுட்ப முறையைக் கொண்டு விற்பனை முனையக் கருவி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், குடும்ப அட்டைகளின் நாடு தழுவிய பெயர்வுத்திறன் வசதியின் துணையோடு அதிக அளவில் மானியங்கள் அளிக்கப்படும் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகிறது. மொத்தம் 26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தில் இணைந்துள்ளன. ஆந்திரா, பீகார், தத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலபிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, லடாக், லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் ...