79ஆவது மனதின் குரல் பிரதமர் மோடியின் உரை.
எனதருமை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன. ...
எனதருமை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன. ...
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் முக்கியமான ஒன்று நீட் தேர்வு ரத்து . திமுகவின் பிரச்சார முழக்கம் ...
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, மேரிகோல்டு போன்ற இதர பாரம்பரிய பூக்கள் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா மற்றும் துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கோயம்பத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த பூக்களைப் பெற்றது. மலர்கள், நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதற்காகத் தகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கேஜிங் முறையை வழங்கி, ஏற்றுமதியாளர்களுக்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மலர் வளர்ப்புத் துறை ஆதரவளித்தது. தரமான மலர்களைப் பெறுவதற்காக ஏற்றுமதியாளர்கள் விவசாயிகளுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தினர். இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது. இந்த ஏற்றுமதி சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, துபாய் மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினர், நறுமணம் கமழும் மலர்களை பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களின் போது தங்களது இல்லங்களில் உள்ள இறைவனுக்கும் ஆலயங்களிலும் பயன்படுத்த உதவிகரமாக இருக்கும். 2020-21-ஆம் ஆண்டில் ரூ. 66.28 கோடி மதிப்பிலான மல்லிகை பூக்கள் மற்றும் பூங்கொத்துகள் (மல்லிகை மற்றும் இதர பாரம்பரிய மலர்களை உள்ளடக்கியது) அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் ரூ. 11.24 கோடி மதிப்பிலான மலர்கள் சென்னை, கோயம்பத்தூர், மதுரை விமான நிலையங்கள் வாயிலாக தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகெங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற மலர்களுள் மதுரை மல்லிகையும் ஒன்று. அதன் நறுமணம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பேரழகுக்கு இணையான புகழைப் பெற்றது. மல்லிகையின் முக்கிய சந்தையாக உருவாகியுள்ள மதுரை, இந்தியாவின் ‘மல்லிகை தலைநகரமாகவும்' வளர்ந்துள்ளது.
கடந்த திங்கள் அன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடை திமுக அரசால் திறக்கப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் நிர்வாகிகள் அவர் அவரது ...
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க மத்திய அரசு ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை ரூ.3,691 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.921.99 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=xXYdslnBULA ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூ.614.35 கோடியை வழங்கியுள்ளது. தமிழகத்துக்கு ஜல்ஜீவன் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 4 மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங், 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு முழு உதவியும் அளிக்கப்டும் என உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.26 வீடுகளில், 40.36 லட்சம் வீடுகளுக்கு (31.80 சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கியபோது, 21.65 லட்சம் (17.06 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் (14.74 சதவீதம்) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 86.53 லட்சம் வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாமல் உள்ளன. இந்தாண்டில் 16.13 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது மிகப் பெரிய பணியாக இருக்கும். 2024ம் ஆண்டுக்குள் இந்தப் பணியை முடிக்க, கிராமங்கங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை தமிழகம் 179 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இந்தாண்டுக்கான செயல் திட்டத்தை தமிழகம் இன்னும் இறுதி செய்யவில்லை. இதை தாமதிக்காமல் இறுதி செய்யும்படி தமிழக அரசை தேசிய ஜல்ஜீவன் திட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. https://www.youtube.com/watch?v=zMIbWl1xLhM ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தும் பணியை விரைவுபடுத்தும்படி தமிழக முதல்வருக்கு, ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். 2020-21ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய ரூ.921.99 கோடியில், தமிழகம் ரூ.544.51 கோடியை மட்டும் பயன்படுத்தியது. ரூ.377.48 கோடியை திருப்பி அளித்தது. இந்தாண்டு 4 மடங்கு அதிகமாக ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செலவழிக்காத நிலுவைத் தொகையாக ரூ.377.48 கோடி உள்ளது. 2020-21ம் ஆண்டில் மாநிலத்தின் பங்களிப்பு பற்றாக்குறையாக ரூ. 290.79 கோடி உள்ளது. 2021-22ம் ஆண்டில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு ரூ.8,428.17 கோடி உள்ளது. ஆகையால், இத்திட்டத்துக்கு பணப் பற்றாக்குறை எதுவும் இல்லை. தமிழக முதல்வருக்கு, மத்திய அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம், கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தமிழகத்தால் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டில், 15வது நிதி ஆணையத்தின் மானியமாக ஊரக உள்ளாட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் துப்புரவு பணிக்கு ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.8,436 கோடி உறுதி அளிக்கப்பட்ட நிதி உள்ளது. தமிழக கிராம பகுதிகளில் செய்யப்படும் இந்த மிகப் பெரிய முதலீடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, கிராம பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். ...
அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான விதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. https://www.youtube.com/watch?v=7ivFWhWNwCY இந்த விதிமுறைகள் 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். ...
2020-21ம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2020-21ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததாக மத்திய வர்த்தகத்துறை செயலாளர் டாக்டர் அனுப் வாதவன் கூறியுள்ளார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 3 நிதியாண்டுகளாக தேக்க நிலையில் இருந்த வேளாண் மற்றும் துணை பொருட்களின் ஏற்றுமதி (கடல்சார் பொருட்கள் மற்றும் தோட்ட பொருட்கள் உட்பட) 2020-21ம் நிதியாண்டில் 41.25 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இது 17.34 சதவீத வளர்ச்சி. 2019-20ம் ஆண்டில், ரூ.2.49 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 2020-21ம் ஆண்டில் ரூ.3.05 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 22.62 சதவீத வளர்ச்சி. இந்தியாவின் வேளாண் மற்றும் துணை பொருட்களின் இறக்குமதி கடந்த 2019-20ம் ஆண்டில், 20.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2020-21ம் ஆண்டில் இது 20.67 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கொவிட் தொற்றுக்கு இடையிலும் வர்த்தக சமநிலை 14.5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 20.58 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது 42.16 சதவீத வளர்ச்சி. கடல்சார் மற்றும் தோட்ட பொருட்கள் தவிர இதர வேளாண் பொருட்கள் கடந்த 2020-21ம் ஆண்டில் 29.81 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28.36 சதவீத வளர்ச்சி. கொவிட்-19 தொற்று காலத்தில், முக்கிய உணவு பொருட்களின் தேவை அதிகரித்ததை, இந்தியா சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. https://www.youtube.com/watch?v=gW2_uspZpgY உணவு தானியங்களின் ஏற்றுமதியும் அதிக வளர்ச்சி கண்டது. பாசுமதி வகை அல்லாத அரிகளின் ஏற்றுமதி மதிப்பு 4794.54 மில்லியன் அமெரிக்க டாலர். இது 136.04 சதவீத வளர்ச்சி. கோதுமை 549.16 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 774.17 சதவீத வளர்ச்சி. கம்பு, சோளம் போன்ற இதர உணவு தானியங்களின் ஏற்றுமதி 694.14 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 238.28 சதவீத வளர்ச்சி. இதர வேளாண் பொருட்களின் ஏற்றுமதியும், கடந்த 2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளன. புண்ணாக்கு வகைகள் 1675.34 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 90.28 சதவீத வளர்ச்சி. சர்க்கரை 2789.97 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும், பருத்தி 1897.20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும், காய்கறிகள் 721.47 மில்லியன் டாலருக்கும், சமையல் எண்ணெய் 602.77 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி 254.39 சதவீதம். இந்திய வேளாண் பொருட்களை அமெரிக்க, சீனா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, நேபாளம், ஈரான், மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்தோனேஷியாவுடனான ஏற்றுமதி வளர்ச்சி 102.42 சதவீதமாகவும், வங்கதேசத்துடனான வளர்ச்சி 95.93 சதவீதமாகவும், நேபாளத்துடனான வளர்ச்சி 50.49 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. ...
பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா முதல் அலையின் போது 8 மாதங்கள் 80 கோடி ஏழை மக்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா அன்ன போஜனா திட்டத்தின் கீழ் ...
மத்திய அரபிக் கடல் பகுதி, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ● தென்மேற்கு பருவமழை, இன்று மத்திய அரபிக் கடல் பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மேலும் முன்னேறியுள்ளது. மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்து வருவதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதனையொட்டிய கிழக்கு மாநிலங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி, சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயாவின் ஒரு சில இடங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19-ஐ எதிர்த்து போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு தொகுப்பு காப்பீட்டு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீட்டு திட்டத்தின் கீழ் ...