Tag: TAMIL NEWS OreDesam NEWS

கலவரத்தை தூண்டுகிறவர்களின் நோக்கம் மோடி அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதா?

கலவரத்தை தூண்டுகிறவர்களின் நோக்கம் மோடி அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதா? நிச்சயமாக இல்லை. சிஏஏ வன்முறைகளுக்கு பிறகும் மோடிக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு இன்னும் ...

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் குறிக்கோள்: அமித்ஷா

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மோடி அரசின் முக்கிய குறிக்கோள் என்றும் புதிய வேளாண் சட்டங்கள் இதற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். ...

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது உணவு தானியங்களின் கொள்முதல்.

காரீப் 2020-21 பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், ஜார்க்கண்ட், அசாம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில் கடந்த 19.01.2021 வரை, 572.32 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு, இதே காலத்தின் கொள்முதலை ...

ராமர் கோயில் கட்டுமானம்! அனில் கதையை மேற்கோள் காட்டி உருக்கமான வீடியோ வெளியிட்ட அக்‌ஷய்குமார்!

ராமர் கோயில் கட்டுமானம்! அனில் கதையை மேற்கோள் காட்டி உருக்கமான வீடியோ வெளியிட்ட அக்‌ஷய்குமார்!

ரசிகர்களுக்காக உருக்கமான வீடியோ ஒன்றை அக்ஷய்குமார் வெளியிட்டுள்ளார். இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எதற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராமாயண ...

திமுகாவிற்க்கு எதிராக வேலை செய்யும் சன் டீவி.

ராகுல்காந்தியை அதிகம் ஆதரிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகுக்கிறது. ராகுல்காந்தி 46% மோடி 28% மக்கள் ஆதரிக்கின்றனர் என சிவோட்டர் செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளதை சன் நீயுஸ் ...

சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.36.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் கடத்தி வந்த ரூ.36.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் தங்கம், சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில், துபாயிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் சங்கர் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் 836 கிராம் தங்கப் பசையை, 3 பொட்டலங்களாக  ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தார். அதிலிருந்து 722 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.36.52 லட்சம். இதையடுத்து மணிகண்டன் சங்கர் கைது செய்யப்பட்டதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கும் திமுகவை வறுத்தெடுத்த விந்தியா.

எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கும் திமுகவை வறுத்தெடுத்த விந்தியா.

திமுகவில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை என்றும், எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கிற திமுக உள்ளதாக நடிகை விந்தியா விமர்சித்துள்ளார். கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு ...

பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி:  பா.ஜ., – அ.தி.மு.க தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு?

பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி: பா.ஜ., – அ.தி.மு.க தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு?

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நேற்று தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர், சி.டி.ரவி முற்றுப்புள்ளி வைத்தார். தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., ...

விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம்: வெற்றிகரமான 5 வருடங்கள் .

ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது 2016 ஜனவரி 13 அன்று, இந்திய விவசாயிகளின் பயிர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை கையாளும் முறையை வலுப்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவொன்றை எடுத்த மத்திய அரசு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, குறைவான, ஒரே மாதிரியான கட்டணத்தில் விரிவான காப்பீட்டுத் தீர்வை அளிக்கும் மைல்கல் நடவடிக்கையாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. https://www.youtube.com/watch?v=rLduNz3H-HE விவசாயிகளின் பங்குத் தொகைக்கு அதிகமான காப்பீட்டு கட்டணம் மாநில அரசாலும், மத்திய அரசாலும் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் இந்தத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 90 சதவீத கட்டண மானியத்தை ஏற்கிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு முன் இருந்த சராசரி காப்பீட்டு தொகையான ஒரு ஹெக்டேருக்கு ரூ.15,100 என்பது, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.40,700 ஆக உயர்த்தப்பட்டது. 2019 கரீப் பருவத்தில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வறண்ட சூழல் நிலவிய போது ரூ 500 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் உள்ளிட்டவை இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க உதாரணங்கள் ஆகும். ஒரு வருடத்தில் 5.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இது வரை, இந்தத் திட்டத்தின் கிழ் ரூ 90,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பின் மூலம் காப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கே விரைவாகச் செலுத்தப்படுகிறது. கொவிட் பொதுமுடக்க காலத்தில் கூட ரூ 8,741.30 கோடி காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்ட நிலையில், சுமார் 70 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர்.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மேம்பட்ட கல்வியையும், தொழில்முனைவு வாய்ப்புக்களையும் நமது இளைஞர்களுக்கு வழங்க நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்: பிரதமர்

தலைமைப் பண்பு குறித்த சுவாமி விவேகானந்தரின் அறிவுரையை  நம் நாட்டின் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தனிநபர்களையும், நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டினார். இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு பேசிய பிரதமர், தனிநபர் வளர்ச்சி முதல் நிறுவன கட்டுமானம் வரையிலும், நிறுவன கட்டுமானம் முதல் தனிநபர் வளர்ச்சி வரையிலான நெறிசார்ந்த சுழற்சியில் சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி தெரிவித்தார். சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு தனிநபர்கள் நிறுவனங்களை உருவாக்குவார்கள் என்றும், இந்த நிறுவனங்கள் புதிய நிறுவனங்களை கட்டமைப்பவர்களை உருவாக்குகின்றன என்று திரு மோடி கூறினார். தனிநபர் வளர்ச்சி முதல் நிறுவன கட்டுமானம் வரையிலும், நிறுவன கட்டுமானம் முதல் தனிநபர் வளர்ச்சி வரையிலான நெறிசார்ந்த சுழற்சியை இது துவக்குகிறது. இந்தியாவின் மிகப்பெரும் சக்தியான இதனை தொழில்முனைவை உதாரணமாகக் கொண்டு பிரதமர் விளக்கினார். ஒரு தனிநபர் மிகப்பெரும் நிறுவனத்தை உருவாக்குகிறார், அந்த நிறுவனத்தின் சூழ்நிலை பல்வேறு அறிவு மிக்க தனி நபர்களின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது, அவர்கள் புதிய நிறுவனங்களை உருவாக்குகின்றனர் என்று பிரதமர் விளக்கம் அளித்தார். தேசிய கல்விக் கொள்கையின் மூலம்  வழங்கப்பட உள்ள நெகிழ்வுத் தன்மை, புதுமையான கற்கும் முறைகள் முதலியவற்றை இளைஞர்கள் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இளைஞர்களின் உயர்ந்த லட்சியங்கள், திறமைகள், புரிதல், விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கி மேம்பட்ட தனிநபர்களை உருவாக்குவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேம்பட்ட கல்வி, தொழில்முனைவு வாய்ப்புகள்  இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் அடிக்கோடிட்டுக் கூறினார்.‌ “இளைஞர்களை வெளிநாடுகளுக்குச் செல்ல தூண்டாத வகையிலான ஒரு சூழலியலை உருவாக்க முயன்று வருகிறோம்”, என்று பிரதமர் கூறினார். தன்னம்பிக்கையான, தெளிவான மனதுடைய, அச்சமில்லாத, தைரியமான இளைஞர்களை நாட்டின் அடித்தளமாக சுவாமி விவேகானந்தர் தான் அங்கீகரித்தார் என்று பிரதமர் தெரிவித்தார். சுவாமி விவேகானந்தரின் தாரக மந்திரங்களை திரு மோடி இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார். உடற்நல தகுதிக்கு “இரும்பை போன்ற தசைகளும் எஃகைப் போன்ற நரம்புகளும்” என்பது. ஃபிட் இந்தியா இயக்கம், யோகா, நவீன வசதிகளை விளையாட்டுத் துறையினருக்கு அளித்து அரசு ஊக்குவித்து வருகிறது.  தனித்தன்மை மேம்பாட்டிற்கு “உங்களை நம்புங்கள்” என்பது சுவாமி விவேகானந்தரின் அறிவுரை; தலைமைப் பண்பு மற்றும் குழு சார்ந்த பணிகளுக்கு “அனைவரையும் நம்புங்கள்” என்று சுவாமி தெரிவித்தார்.

Page 164 of 175 1 163 164 165 175

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x