Tag: Tamil

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

பட்டா வழங்கும் திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்து, இந்தத் திட்டம் குறித்து  பயனாளிகளுடன் உரையாடினார். சொத்து விவர அட்டைகள் கிடைக்கப்பெற்ற பயனாளிகளுக்குப் பிரதமர்  வாழ்த்து தெரிவித்தார். அவர்களது வீடு அவர்களுக்கு சொந்தமானது என்பதை சட்டபூர்வமான ஆவணத்துடன் நிரூபிக்கும் உரிமையை, பயனாளிகள் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் நமது கிராமங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்சார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில், கிராமங்களைத் தன்னிறைவு அடையச் செய்யும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாக  அவர் கூறினார். ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேருக்கு அவர்களது வீடுகளுக்கான சொத்து விவர அட்டை இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த  மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் இந்த அட்டை வழங்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். திரு ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் திரு நானா ஜி தேஷ்முக் ஆகிய இருபெரும் தலைவர்களின் பிறந்த நாளான இன்று இந்த திட்டம் தொடங்கப்படுவது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இந்த இரு தலைவர்களின் பிறந்த நாட்கள் மட்டும் ஒன்றாகக்  கொண்டாடப்படவில்லை என்று தெரிவித்த பிரதமர், அவர்களது போராட்டங்களும் கொள்கைகளும் கூட ஒத்து இருந்தது என்று கூறினார். திரு ஜெயப்பிரகாஷ் நாராயணும்,  திரு நானா ஜி தேஷ்முக்கும்,  ஏழை மற்றும் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடியதைப் பிரதமர் எடுத்துக் கூறினார். கிராமங்களில் வாழும் மக்களுக்குள் பூசல்கள் ஏற்படும் போது அவர்களால் தங்களையும் தங்களது சமூகத்தையும் வளர்த்துக் கொள்ள இயலாது என்ற திரு நானா ஜியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இது போன்ற வேறுபாடுகளைக் களைய உடைமைத் திட்டம் உதவியாக இருக்கும்  என்று தாம் பெரிதும் நம்புவதாகக் குறிப்பிட்டார். நிலம் மற்றும் வீடுகளின் உரிமை, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் கூறினார். தங்களது சொத்திற்கு அடையாளம் கிடைக்கும் போது, குடிமக்களின் தன்னம்பிக்கை உயர்வதுடன், முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். சொத்தின் ஆவணங்களின் பேரில் வங்கியிலிருந்து கடன் எளிதாகக் கிடைக்கும் என்றும், வேலைவாய்ப்புக்கான வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார். இன்றைய காலகட்டத்தில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தங்களது சொத்துக்களை முறையாக ஆவணப்படுத்தி  உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கிராம மக்கள் தங்கள் சொத்துக்களை எளிதில் வாங்கவோ விற்கவோ இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்று அவர் மேலும்தெரிவித்தார்.  இன்று நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்கள் தாங்களே சொந்தமாக பணம் ஈட்ட விரும்புவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இது போன்ற இளைஞர்களுக்கு சொத்து அட்டை வழங்கப்பட்டவுடன் அதனைப் பயன்படுத்தி, அவர்கள் வங்கிகளில் சுலபமாக கடன் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் உறுதி அளித்தார். ட்ரோன் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நிலங்கள் குறித்து துல்லியமான விவரங்களைப் பெற முடியும் என்று அவர்  நம்பிக்கை தெரிவித்தார். துல்லியமான ஆதாரங்களின் உதவியுடன் கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த முடியும் என்றும், இது இந்தத் திட்டத்தின் மற்றொரு பயன் என்றும் அவர் கூறினார். கடந்த ஆறு வருடங்களாக பஞ்சாயத்து முறையை மேம்படுத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை இந்த ஸ்வாமித்வா திட்டம் மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். கிராமப் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், நகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு இணையாக கிராமங்களையும் மேம்படுத்த இந்த ஸ்வாமித்வா  திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில், கிராமங்களில் நீண்ட நாட்களாக நிலவிவந்த  தட்டுப்பாடுகளைக் களையவும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர். சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆறு வருடங்களில் கிராமங்களின் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். வங்கி சேமிப்புக் கணக்கு, மின் இணைப்பு, கழிவறை வசதி, எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்புடன் வீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கடந்த 6  வருடங்களில் கிராம மக்களுக்கு செய்து தரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் கண்ணாடி ஒளியிழை என்று அழைக்கப்படும் ஆப்டிகல் பைபர் இணைப்பின் மூலம் இணைக்கும் முயற்சி துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வேளாண் சீர்திருத்தங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் வாதத்தை மறுத்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நம் விவசாயிகள் தன்னிறைவு அடைவதில் விருப்பம் இல்லாதவர்கள்தான் இந்தச் சீர்திருத்தங்களை எதிர்க்கின்றனர் என்றார். சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் இடையர்களுக்கு வழங்கப்படும் கிசான் கடன் அட்டையின் மூலம் இடைத்தரகர்களின் சட்டவிரோதமான வருமானம் தடைப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். உரத்திற்கு வேம்பு பூச்சு, விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு உரித்தான பணத்தை நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துதல் போன்ற முடிவுகளை, விரயமாவதை  பெருமளவில் தடுக்கும் முயற்சிகளாக பட்டியலிட்ட பிரதமர்,  இவ்வாறு குறைபாடுகளை நீக்குவதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தான் வேளாண் சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர் என்று கூறினார். நாட்டின் முன்னேற்றம் இத்தகைய நபர்களால் தடைபடாது.  கிராமங்களையும் ஏழை மக்களையும் தன்னிறைவு அடைய செய்யும் அரசின் முயற்சிகள் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  இந்த இலக்கை அடைய ஸ்வாமித்வா திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்தார்.

உ.பி காங்கிரஸ்  வேட்பாளர் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்! எதிர் கேள்வி கேட்ட பெண் தாக்கப்பட்டார் ! வாய் திறப்பாரா ராகுலும் பிரியங்கவும்!

உ.பி காங்கிரஸ் வேட்பாளர் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்! எதிர் கேள்வி கேட்ட பெண் தாக்கப்பட்டார் ! வாய் திறப்பாரா ராகுலும் பிரியங்கவும்!

உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் இடைத்தேர்தலில் பாலியல் வழக்கில் சிக்கிய காங்கிரஸ்காரருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய காங்கிரஸ் பெண் தொண்டரை, காங்கிரஸ் கட்சியினரே தாக்கிய ...

பூசாரி உயிருடன் எரித்து கொலை! கோவில்! நில ஆக்கிரமிப்பை தடுத்ததால் நடந்த கொடூர சம்பவம்!

பூசாரி உயிருடன் எரித்து கொலை! கோவில்! நில ஆக்கிரமிப்பை தடுத்ததால் நடந்த கொடூர சம்பவம்!

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் கோவில் நில ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்ட கோயில் பூசாரி, உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபோத்ராவில் உள்ள புக்னா ...

கேரளாவில் 13 வயது சிறுமியை கூட்டு சேர்ந்து கற்பழித்த கயவர்கள்! நான்கு பேர் கைது!

கேரளாவில் 13 வயது சிறுமியை கூட்டு சேர்ந்து கற்பழித்த கயவர்கள்! நான்கு பேர் கைது!

கொரோனாவால் நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. ஆன்லைன் வகுப்பு என பள்ளிகளும் இறங்கி விட்டது. இதன் காரணமக மாணவ ...

நீர்நிலைகளின் மேல் பறக்கும்  ‘சீ ப்ளேன்’விமான சேவை ! சென்னை டு கன்யாகுமரி! வெளிவந்த தகவல் !

நீர்நிலைகளின் மேல் பறக்கும் ‘சீ ப்ளேன்’விமான சேவை ! சென்னை டு கன்யாகுமரி! வெளிவந்த தகவல் !

தமிழகத்தில் பல்வேறு தேசிய நெடுஞசாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மத்திய அரசு பாலங்கள் கட்டி வருகிறது, விரைவாகவும் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ...

எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் – பன்னீர்செல்வம் அறிவிப்பு!

 அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்று வந்தது. இதனிடையே கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு 7-ம் தேதியான இன்று வெளியாகும் ...

வன உயிர்களை பாதுகாப்பதற்கும், இணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்குமான உறுதியை வலியுறுத்துவதற்கான நிகழ்வே வன உயிர்கள் வாரம்: பிரதமர் மோடி.

'புலித் திட்டம்' மற்றும் 'யானைத் திட்டம்' ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக 'சிங்கத் திட்டம்'  மற்றும் 'டால்பின் திட்டம்' ஆகிய பிரத்யேக திட்டங்களை நாடு செயல்படுத்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வன உயிர்கள் வாரத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த திட்டங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விளைவுகளை எட்டுவதற்காக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் கோரினார். அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக விளங்கிய மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் வன உயிர்கள் வாரம், வன உயிர்களை பாதுகாப்பதற்கும், அனைத்து உயிர்களும் இணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்குமான உறுதியை வலியுறுத்துவதற்கான சரியான தருணம் என்று பிரதமர் கூறினார். https://www.youtube.com/watch?v=Lo1e27nR-yQ பாதுகாக்கப்பட்ட பகுதிகள் துடிப்புடனும் அதிக அளவிலும் விளங்கும் இன்றைய காலகட்டத்தில், வன உயிர்களின் பாதுகாப்பும் முன்னெப்போதையும் விட வலிமை பெற்று இருப்பதாக அவர் கூறினார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்த திரு மோடி, வன உயிர்கள் செழிப்புடன் திகழ இத்தகைய பகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆசிய சிங்கங்களின் கடைசி மக்கள் தொகை இந்தியாவில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கு முன்னதாகவே எட்டப்பட்டதாக கூறினார். நெகிழி கழிவு மேலாண்மைக்கு இந்தியா அளித்துவரும் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்ட பிரதமர், நீடித்த வளர்ச்சிக்காகவும், வளமான பல்லுயிர் தன்மைக்காகவும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் பயன்பாட்டை குறைக்க இந்தியா முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். இடம்பெயரும் உயிர்களின் இல்லமாக இந்தியா திகழ்வதால் இந்த உயிர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் நாடு அளித்து வருவதாக திரு மோடி கூறினார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A&t=4s\ உலகின் நிலப் பரப்பளவில் 2.4% உள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தை தன்னகத்தே கொண்டு இருப்பதாக கூறிய திரு மோடி, இந்தியாவின் வளர்ச்சி தேவைகள் மிகவும் அதிகமானவை என்றார். அதேசமயம் வன உயிர்கள் மற்றும் பல்லுயிர்களின் பாதுகாப்பும் அதே அளவுக்கு முக்கியமானது என்று அவர் கூறினார்.----                         ...

10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் நீளமான சுரங்கம் அமைத்து இந்தியா சாதனை! அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி !

10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் நீளமான சுரங்கம் அமைத்து இந்தியா சாதனை! அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி !

உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ...

மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

கோவிட் 19 பொது ஊரடங்கானது உள்ளூர் அளவில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.  வேளாண்மை துறை உள்ளிட்ட உள்ளூர் அளவிலான ...

Page 16 of 25 1 15 16 17 25

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x