தமிழக விவசாய பட்ஜெட் கண்துடைப்பு நாடகம்! வியர்வை சிந்தி விளைவிச்ச நெல், சேதமடையுதே!’’ – கதறும் விவசாயிகள்

தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தாலே அச்சமாக உள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கூறியிருக்கிறார்.

நிதி நிலைமை போக்கு என்பது தேர்தலுக்கு முன்னரே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் பேசப்பட்டது. அப்படி இருக்கையில் ஏன் தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டது.

இப்பொழுது எந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் முந்திய அரசாங்கத்தின் பழி சுமத்துகிறார்கள். எந்த சாதனையை நிறைவேற்ற முடியவில்லை.

முக்கியமாக விவசாயிகள் கோடைக்கால சாகுபடி செய்த பொழுது கடுமையான மின்வெட்டு காரணமாக மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள். பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததை தவிர பெரிய சாதனை ஏதும் செய்ததாக தெரியவில்லை.

விவசாயத்திற்கு தனிபட்ஜெட் எல்லாம் நன்றாகத்தான் உள்ளது அதை நடைமுறைப் படுத்தும் பொழுது விவசாயிக்கு நேரிடையாக எந்த பலனும் கிடைக்காது.உதாரணம் தார்பாய் வாங்க 50 கோடி ரூபாய் ஓதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எத்தனை விவசாயிகளுக்கு தார்பாய் சென்று சேரும் என்று தெரியவில்லை. மாநில பட்ஜெட் கண்துடைப்பு நாடகம் என்கிறார்கள் விவசாயிகள்.

தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகளுக்கு விவசாயிகள் லஞ்சம் கொடுக்க தேவையில்லை

நெல் சாகுபடி செய்த விவசாயி இப்பொழுது கிராம நிர்வாக அலுவலரிடம் சாகுபடி செய்ததற்கான சான்றிதழ் பெற வேண்டும். அதை வேளாண் அலுவலகத்திற்கு சென்று ( தாலுக்காவிற்கு ஒன்றுதான் இருக்கும்) விஏஓ கொடுத்த சான்றிதழ் காட்டி டோக்கன் பெறவேண்டும்.

இதை நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அவர்களோ இப்பொழுது ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்க மறுக்ககிறார்கள்.

விவசாயிகள்அறுவடை செய்த நெல் சேமித்து வைக்கவே இடமில்லை. அவர்களே தார்சாலைகளிலும், கிராம் உட்புறச் சாலைகளிலும் நெல்லை கொட்டி வைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக பட்சம் 10 கிராமங்களில் அறுவடை செய்த நெல் மட்டும் வாங்கப்படுகிறது. எந்தந்த ஊர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். அதனால் அந்த கிராமங்களை தவிர மற்ற கிராமத்தில் இருந்து வரும் நெல் வாங்குவதில்லை.

மழை பெய்வதால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். அதிகாரிகளை லஞ்சம் வாங்காமல் செய்வதால் அதிகாரிகளோ ஈரப்பதத்தைக் காட்டி நெலை வாங்க மறுக்கிறார்கள்.

அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கு நடக்கும் போட்டியால் விவசாயிகள் பாதிக்கிறார்கள்.

நெல் கொள்முதல் செய்யப்படுவதில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால், கொள்முதல் நிலையங்களில் காத்துக்கிடக்கும் நெல், மழையில் நனைந்து சேதமடையக்கூடிய அவலம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மூப்பக்கோயில் மற்றும் ஏரகரம் பகுதியில் முன்பட்ட குறுவையில் சாகுபடி செய்த நெல், மழையில் நனைந்து வீணாவதைக் கண்டு இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்கள்.

Exit mobile version