தமிழக காவல் துறை அதிகாரிகளால் இன்று அதிரடியாக கைது செய்ப்பட்டுள்ளார் யூடியூபர் சவுக்கு சங்கர். தமிழகத்தில் அதிகரித்து வருகிறது கஞ்சா போதை கொலை கொள்ளை சம்பவங்கள் குற்றச்சம்பவங்களும் குற்றாவாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த மாதம் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க வேட்பாளராக போட்டியிடும் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், பிரச்சாரம் செய்யும் போது கிளி ஜோசியம் பார்த்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலனது. அதன் தொடர்ச்சியாக தென்னம்பாக்கம் அழகர் கோயிலில் கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ஜோசியக்காரர்களை அதிரடியாக கைது செய்தது தமிழக வனத்துறை
இந்நிலையில் சமீப காலமாக சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தவர் சவுக்குசங்கர். முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் கூறி வந்தார். சமீபத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்தும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்தனர்.கடந்தாண்டு தமிழக அமைச்சர்கள் தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோ பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.சவுக்கு சங்கரை கோவை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம், தாராபுரம் அருகே விபத்தில் சிக்கியது. போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
கிளி ஜோசியர், பஞ்சுமிட்டாய் தடை யூடியூபர் கைது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு