தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த எல் முருகன் மத்திய இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றது தொடர்ந்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போதைய பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவதாக கட்சியின் சார்பில் வேலை கிழமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார் கரூர் மாவட்ட சார்ந்த வரும் தற்போதைய பாஜக மாநில துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் தமிழக பாஜகவில் தற்போதைய காலத்தில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவராக அண்ணாமலை விளங்கி வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற அதைத் தொடர்ந்து தற்போது அண்ணாமலையும் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் .

அண்ணாமலையின் வாழ்க்கை குறிப்பு :-
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலையின் தந்தை பெயர் குப்புசாமி கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாமலை இவர் கோயம்புத்தூர் பகுதியில் பட்டபடிப்பு முடித்து உயர் கல்விக்காக லக்னத்துக்கு சென்று அங்குள்ள மக்கள் வாழ்வு நிலையை பார்த்து ஐபிஎஸ் படித்து சேவை செய்ய வேண்டும் என சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கர்நாடகா மாநில செயலாளர் அங்கு பயிற்சி எஸ்பியாக பணியைத் தொடங்கியவர் தனது பணி காலத்தில் கர்நாடகம் தாண்டி தமிழகத்திலும் பிரபலமானார் சீனியர் எஸ்பியாக பதவில் இருந்த போது 2019ஆம் ஆண்டு ஐபிஎல் பதவியிலிருந்து விலகினார் பின்னர் சில காலம் ஒரு அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார்.

இவர் ரஜினி கட்சியை தொடங்கி அதில் இவர் சேர்வார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் ரஜினி கட்சி முடிவை கைவிட்டு அதை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார் கட்சியில் இணைந்து ஓராண்டிற்குள் அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜகவில் இந்த மாற்றம் எவ்வாறு பிரதிபலிப்பும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version