சைலேந்திரபாபுவை பிரதமர் மோடி இதற்காக தான் பாராட்டினார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சமீபத்தில் அனைத்து மாநில டி.ஜி.பி.க்கள் மாநாடு நடந்தது.  இதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுடன் பிரதமர் மோடி தனியாக பேசியதோடு புகைப்படமும் எடுத்து கொண்டார்.

இது குறித்து உள்துறை அதிகாரிகள் கூறும்போது, நீங்கள் சைக்கிளில் மகாபலிபுரம் சென்று வருகிறீர்களே. அதை சமூக வலைதளங்களில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்கள் என பிரதமர் மோடி, சைலேந்திர பாபுவிடம் கூறியுள்ளார்.


இந்த சந்திப்பில், பிரதமரிடம் 15 பக்க அறிக்கையை சைலேந்திர பாபு அளித்துள்ளார்.  இந்த அறிக்கையை முதல்-அமைச்சர் பார்த்து ஒப்புதல் அளித்த பின்தான் மோடியிடம் தமிழக அரசின் சார்பாக அளித்துள்ளார். தமிழகத்தில் கலவரம், மதமாற்றம், சிலை திருட்டு, சமூக வலைதளங்களின் போக்கு, சைபர் குற்றங்கள், சிறுமியர் மீது பாலியல் குற்றங்கள் என பல விஷயங்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version