ஒரு மாதத்திற்கு போதுமான அளவுநிலக்கரி இருப்பு இருக்கிறது!7 கோடியே 25 லட்சம் டன் நிலக்கரி விநியோகத்திற்கான இருப்பாக இருக்கிறது! 2 கோடியே20 லட்சம் டன் நிலக்கரிமின் நிலையங்களில் இருக்கிறது! என நிலக்கரித்துறை துறை அமைச்சரின் அறிக்கைவந்துள்ளது.
ஒரு மாதத்திற்கு போதுமான அளவுஇருப்பு இருக்கிறது என்றால்அதன் பிறகு தட்டுப்பாடு வரும் என்று அர்த்தமில்லை.குறைய குறைய இட்டு நிரப்பும் அளவுக்குஉற்பத்தியும் நடந்து கொண்டிருக்கும் ! ஆக, நிலக்கரி தட்டுபாடு காரணமாகமின் தடை என்ற செய்திகள் பொய் அல்லது வதந்தி!
நிலக்கரி உற்பத்தி போதிய அளவு இருக்கிறது என்பதைதமிழக முதலமைச்சர் கூட உறுதி செய்து இருக்கிறார்!நேற்று (22-4-2022)அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்அதிகரித்திருக்கும் கோடை கால தேவையை நிறைவு செய்ய போதிய அளவில் நிலக்கரி உற்பத்தி நடப்பதை தாம் அறிந்திருப்பதாக பிரதமருக்குச் சொல்கிறார்.
அதே சமயம்,தமிழ் நாட்டின் தினசரி தேவை72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி.ஒடிசாவில் இருந்து அதை விசாகபட்டினம் துறைமுகத்திற்குகொண்டு வந்து சேர்க்க சரக்கு ரெயில்களின் 22 ரேக்குகள் வேண்டும்.ஆனால், சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே ஒதுக்கப்படுவதால்நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன்களுக்கு பதிலாக50 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி மட்டுமேவந்து சேருகிறது. அதனால்,பிரதமர் நேரடியாக தலையிட்டு14 ரேக்குகளோடு கூட மேலும் 8ரேக்குகள் கிடைக்க ஆவன செய்துதட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பதேமுதலமைச்சர் எழுதிய கடிதத்தின் சாராம்சம்!
எனவே, தமிழ் நாட்டின் மின்தடைக்குநிலக்கரி விநியோக பற்றாக்குறைகாரணமல்ல ! மேலும்,ரெயில்வே துறையின் சரக்கு வாகன குறைப்பு தமிழ் நாட்டுக்கு எதிரான மத்திய அரசின்
திட்டமிட்ட சதி என்று சொல்ல முடியுமா?ரெயில்வே துறையின் சரக்கு வாகனங்கள்பொருள் போக்குவரத்தில் ஈடுபடாமல்இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவா? இல்லை அப்படி ஏதும் தமிழக அரசு முன் கூட்டியே இது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவில்லை.அவர்கள் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் தான் குறியாக இருந்தார்கள். இந்த நிலையில் தான் தமிழகம் எங்கும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனை சமாளிக்க முடியாமல் பழியை தூக்கி மத்திய அரசின் மீது போடப்பட்டது.
தமிழகத்தை போலவே எல்லா மாநிலங்களும்கோடைகால மிகை தேவையால்வழக்கத்தைவிட கூடுதல் நிலக்கரியைகொண்டு செல்வது இயல்பானது!
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வருகிறது,நாடெங்கும் மின்தேவையின் அளவு அதிகரிக்கிறது.எனவே, அரசு புதிதாக இந்த ஆண்டுஎதிர்கொள்ளும் பிரச்சனை அல்ல இது.வழக்கமாக எதிர்கொள்ளும் பிரச்சனைக்குமுன்கூட்டி திட்டமிடல் என்பது அடிப்படை நிர்வாக முறை அல்லவா?
தமிழக மின் துறை அமைச்சரின்அறிவிப்புகள் விபரீத விநோதங்களாக இருக்கின்றன.முதலமைச்சர் சொல்கிறார்,தினமும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வந்து கொண்டு இருப்பதாக!மின் துறை அமைச்சரோ32 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே வருவாதக!
முதலமைச்சர் பிரதமருக்கு தவறான தகவலை தர முடியாது!மின் துறை அமைச்சர் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்களை வைத்திருக்க ஏதுவான புள்ளி விவரங்களை தருகிறாரா? நிலக்கரி வரத்து விஷயத்தில் மட்டுமல்ல,மத்திய தொகுப்பில் இருந்து வந்து கொண்டு இருந்த மின்சாரம் குறித்தும்அமைச்சர் வெவ்வேறு புள்ளி விவரங்களை தருகிறார்.
முதலில் மத்திய தொகுப்பில் இருந்துதென் மாநிலங்களுக்கு வந்து கொண்டு இருந்த 750 MWமின்சாரம் திடீரென்று நிறுத்தப்பட்டதால்எதிர்பாரத மின்தடை என்றார்.தென் மாநிலங்களுக்கான தொகுப்பில்தமிழகத்திற்கு வந்து கொண்டு இருந்த750 MW என்றுஅவர் சொல்லவில்லை.அதே மத்திய தொகுப்பு மின்சாரத்தின் அளவை தமிழ் நாட்டிற்கு வர வேண்டிய 296 மெகா வாட் மின்சாரம் இப்போது வரை வரவில்லை என கூறி இருக்கிறார்.( ஆனந்த விகடன்.)
ஆனால், அமைச்சர் தனது முக நூல் பதிவில்796 MW மத்திய தொகுப்பு மின்சாரம்வராததால் மின் தடை ஏற்பட்டதாக கூறி இருக்கிறார்.ஒருவேளை அமைச்சர் 796 என்று சொன்னது296 என்று (உள் நோக்கம் இல்லாமல்)தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கலாம்.
ஆனால், மின் தடை ஏற்பட்ட அன்று ஒட்டுமொத்த தென் மாநிலங்களுக்கானமத்திய தொகுப்பு என்பது போல சொல்லிவிட்டு,தமிழகத்தின் பங்கு என்பதாக இப்போது சொல்வது சட்ட மன்றத்தில்தவறான தகவலை பதிவு செய்ய முடியாத இயலாமையால் கூட இருக்கலாம் !
இந்த மத்திய தொகுப்பு மின்சாரம்நிறுத்தப்பட்ட விவகாரத்தில்,ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.அதாவது, ஏப்ரல் மாதத்திறகான மத்திய தொகுப்பு மின்சார தேவையின் அளவு குறித்து மார்ச் இறுதியில்தமிழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை எத்தனை மெகா வாட்?
அதில் எத்தனை மெகா வாட் மின்சாரம்வந்து இருக்கிறது?அதாவது, ஏப்ரல் மாதத்திற்காக கேட்கப்பட்ட அளவில் மிச்சம் இருக்கும் போதே மத்திய தொகுப்பில் இருந்துநிறுத்தப்பட்டுவிட்டாதா?அல்லது,ஏப்ரல் மாதத்திற்கான மொத்த மின்சாரத்தையும் தமிழகம் பயன்படுத்தி தீர்த்துவிட்டதால் நிறுத்தப்பட்டதா?
மத்திய தொகுப்பில் இருந்தவந்து கொண்டு இருந்த மின்சாரம் திடீரென்று நின்றதற்கு தொழில் நுட்ப கோளாறு காரணமாக இருந்தால் நிலைமை சீராகிவரத் துவங்கி இருக்க வேண்டும்.தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக செய்திகளும் இல்லை.
காரணம் ஏதுமின்றி நிறுத்தப்பட்டு இருக்குமானால் மத்திய தொகுப்பில் இருந்துவரவேண்டிய மின்சாரம் நிறுத்தப்பட்டதைபிரதமருக்கு தான் எழுதிய கடிதத்தில் கட்டாயம் குறிப்பிட்டு இருப்பார்.அந்த பிரச்சனையை எழுத முதலமைச்சர் கவலையே படவில்லையே!தகுந்த மாற்று ஏற்பாடுகள் மற்றும்மாநில மின் உற்பத்தி அதிகரிப்பு மூலம்சீரான மின் விநியோகம்…..என்றுஅமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.