இணையத்தை தெறிக்கவிடும் #வரிகட்டுங்க_விஜய்! விஜயை வச்சு செய்த நெட்டிசன்கள்!

கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி 5 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கேட்டு வழக்கு தொடர்ந்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள் #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹாஸ்டக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

விஜய் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதில் விஜய் மற்றும் நடிகர்களை கடுமையாக சாடி தீர்ப்பினை வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம். நடிகர் விஜய் அவர்களுக்கு 1 லட்சம் அபராதம் விதித்து நடிகர் விஜயின் வழக்கை தள்ளுபடி செய்தது.

நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு என நடிகர்களை கடுமையாக சாடினார் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம். என தெரிவித்த நிலையில் நெட்டிசன்கள் தெறிக்கவிட ஆரம்பித்துள்ளார்கள் #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹாஷ்டாக்கை இந்திய அளவில் தெறிக்கவிட்டுள்ளார்கள்

Exit mobile version