கிறிஸ்த்துவமிஷினரி பள்ளியில் மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை சேட்டையில் ஈடுபட்ட ஆசிரியர்! மௌனம் காக்கும் போராளீஸ்.

11ஆம் வகுப்பு மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த புதுக்கோட்டை புனித பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளி ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மறுப்பினிசாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சண்முகநாதன் என்பவர் தொலைபேசி மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

செல்போனில் மன்மதன் போல பில்டப் செய்து பேசி மாணவிகளை காதல் டீயூசனுக்கு கட்டாயப்படுத்திய புகாரில் போலீசிடம் சிக்கிய 50 வயதான மன்மத ஆசிரியர் சண்முகநாதன் இவன் தான்..!

புதுக்கோட்டையில் எஸ்.எப்.எஸ் என்கிற புனித பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்ற சில நாட்களிலேயே வணிகவியல் ஆசிரியர் சண்முக நாதனின் கொள்ளிக்கண்ணில் பட்டு விட, வலுக்கட்டாயமாக அவரிடம் தனது செல்போன் நம்பரை கொடுத்து பேசச்சொல்லி டார்ச்சர் செய்ததாக கூறப்படுகின்றது.

அவனது தொல்லையில் சிக்கிய மாணவி ஒருவர் தனது சகோதரனின் அறிவுறுத்தலின் பேரில் சண்முக நாதனுடன் பேசிய ஆடியோக்களை பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளார்.

பள்ளி வகுப்பறையில் சந்தேகம் கேட்ட அந்த மாணவியின் அருகில் நின்றதை கூட வக்கிரமாக நினைத்து சந்தோசப்பட்டதாக மாணவியிடம் கூறுகிறான் சண்முக நாதன்

புகாரை அடுத்து மாணவியுடன் ஆசிரியர் செல்போனில் பேசிய உரையாடலை வைத்து விசாரணை செய்ததன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததை அடுத்து தனியார் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதையடுத்து மாணவியிடம் பேசிய ஆடியோ பதிவை கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி, முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.பிளஸ்-1 மாணவியிடம் ஆன்-லைன், வாட்ஸ்-அப் மூலம் பாடம் நடத்தும் போது செல்போனில் இரட்டை அர்த்தத்தில் ஆசிரியர் சண்முகநாதன் பேசியுள்ளார். அவர் பணிக்கு சேர்ந்து சில மாதங்கள் தான் ஆனதாம். புகாரின் அடிப்படையில் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. அதேவேளையில், புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வந்த நிலையில், நீதிபதியே நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, காமுகன் சண்முகநாதனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Exit mobile version