ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல்.
மலைப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்வு.உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
காவலர் கட்டுப்பாட்டு அறை பகுதியில் 29 பேரின் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளன.
இந்நிலையில்,ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு
படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத
தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டை தீவிரம்.
பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்
இடையே கடும் துப்பாக்கிச் சண்டை.
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு – ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல்.
