கோவில் முன்பு பிரியாணி கடை மூடப்பட்ட தண்டுமாரியம்மன் கோவில்! அறநிலையத்துறை தூங்குகிறதா?

சென்னை அருகே மந்தவெளி மார்க்கெட் பகுதி உள்ளது இந்த மார்க்கெட் பகுதி அருகில் பழமைவாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது மிகவும் பழமையான கோவிலாகும் இந்த கோவிலில் ஆடிமாத நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த நிலையில் அக்கோவிலில் ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது

அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கோயிலின் அருகினிலே அசைவம் சமைத்து, விற்பதனால், அதனால் ஏற்படும் தர்ம சங்கடங்களால் கோயில் மூடி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோயில் அருகில் அசைவம் சமைக்கப்படுவதால், குருக்கள், பக்தர்கள் வர தயங்குகிறார்கள். இந்த கோயில் நேற்று திறக்கப்பட்டு இருந்த நிலையில், அருகில் அசைவம் சமைக்கப்படுவதால் இன்று முதல் தற்காலிகமாக பூட்டப்பட்டு உள்ளது.

அங்கு பூஜை செய்யும் பூசாரியை தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது கடவுளுக்கு என்று சில சமய சம்பிரதாயங்கள் உள்ளது அதை மீறுவதற்கு மனது வரவில்லை கோவிலின் முன்பு மாட்டிறைச்சி சமைத்தும் அங்கே விற்கப்படுவது சங்கடமாக உள்ளது இதைப்பற்றி நான் கேட்டபோது என் காசு நான் என்ன வேணாலும் செய்வேன் என அந்த இறைச்சி விற்பவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் கடையின் சொந்தக்காரரை சந்தித்து இதைப்பற்றி கூறியபோது நான் உள்ளே வைத்து சமைக்க சொல்கிறேன் என்று கூறியுள்ளார்

ஆனால் தினமும் கோவிலின் வாசலில் வைத்தேன் பிரியாணி செய்து விற்று வருகிறார்கள் இதை மீண்டும் கடை சொந்தக்காரர்களிடம் தெரிவித்தபோது நீங்கள் வேண்டுமானால் கோயிலுக்கு மூடி கொள்ளுங்கள் என்று அடாவடியாக பதில் சொல்லியுள்ளார் ஊர் கோவிலுக்கே இந்த நிலைமை என்றால் இந்துக்களை நிலைமை என்னவாகும் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.

தமிழக அரசு நிர்வாகித்துவரும் இந்து அறநிலையத்துறை என்ன செய்கின்றது பணம் வரும் கோவில்களை மட்டும் கவனிப்பதும் பணம் வராத கோயில்களை இப்படி மூடு செய்வதும் தான் இந்து அறநிலையத்துறையின் வேலையா இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள் மேலும் இந்து முன்னணி மற்றும் இந்த சங்கங்கள் ஒன்றிணைந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறியுள்ளார்கள்

Exit mobile version