விஜய் கட்சியில் தொடங்கிய அட்ராசிட்டி… அரசு போஸ்டிங்லாம் கட்சிக்கு தானாம்..என்னங்கடா அதுக்குள்ளவா?

#TVKVijay #தமிழகவெற்றிகழகம்

#TVKVijay #தமிழகவெற்றிகழகம்

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர்விஜய் . கடந்த வாரம் மதமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அரசியல் கட்சி தொடங்கியதற்கு ஆதரவு குரலும் எதிர்ப்பு குரலும் வந்தது. நடிகர் விஜய் தன்னுடைய நற்பணி மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி நலத்திட்ட பணிகள் செய்து வந்தார். அதற்கான மாவட்ட நிர்வாகிகளை நியமித்து அந்த இயக்கத்தை செயல்படுத்தி வந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றினார் அதற்கான தலைவராக விஜய்யும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் பாட ஷூட்டிங்கில் படு பிஸியாக உள்ளார் கண் எதிரே இருக்கும் மக்களவைத் தேர்தலை விட்டு விட்டு சட்டமன்றத் தேர்தல் தான் என இலக்கு என கூறிவிட்டு பட வேலைகளை பார்த்து வருகிறார்.

விஜய் கட்சி நிர்வாகிகள் சோர்ந்து விட கூடாது என்பதற்காக தினமும் மாவட்ட வாரியாக பனையூரில் கூட்டம் நடத்தி வருகிறார் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அந்த வகையில் சென்னை புறநகர் மாவட்டம் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசியது தான் அவருக்கே தலைவலியாக மாறியுள்ளது.

எடுத்ததுமே நமது கட்சியில் புதியவர்கள் வந்து சேர்ந்தால் இங்கு இருப்பவர்கள் பதவி கிடைக்காமல் போய்விடும் என பயம் கொள்ள கூடாது.தளபதி நெஞ்சில் யாரெல்லாம் குடியிருக்கிறார்களோ அவர்களுக்கு உண்டான பதவி தேடி வரும் மேலும் அவர் பேசுகையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகஅரியணை ஏறுவார். ஒன்றியம் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி என பல அரசு பதவிகள் உள்ளன அந்த பதவிகளையும் உங்களுக்குத் தான் என பேசிய புஸ்ஸி ஆனந்த். மேலும் கட்சியின் தலைவர் விரைவில் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி கொடி நிறங்களைஅதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.

இனிமேல் கட்சியின் முக்கிய தகவல்களை முழுவதும் தலைவர் தான் அறிவிப்பார். முதலில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளில் பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமங்களுக்கு சென்று அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.உங்கள் பணியை முடித்துவிட்டு தினந்தோறும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கட்சிக்காக உழைக்க வேண்டும்

சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈ சி ஆர் சரவணன் அவர்களும் பச்சை இன்க்கில் கையெழுத்து போடுவார்.என கூறியதும் கைதட்டலும் விசிலும் பறந்தது. விஜயை பற்றி பேசும்போது கூட அந்த அளவிற்கு கைதட்டல் இல்லை. ஆரம்பத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு பதவி ஆசையை கட்டி குஷிபடுத்தி பேசினார் ஆனால் கடைசியில் ஒரு அடையாளத்திற்கு தான் தங்கள் பதவிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஒவ்வொருவரும் தலைவர் விஜயின் தோழர்கள் தான் எனவும் மாற்றி பேசினார்.

கட்சி தொடங்கியது மட்டும்தான் தற்போது நடந்துள்ளது அதற்குள் ஆட்சிக்கு வருவது என்று கூட ஆசையாக இருந்தாலும் எல்லா பதவிகளும் கட்சி நிர்வாகிகளுக்கு தான் என பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது கட்சியில் உள்ளவர்கள் மட்டுமே பதவிக்கு வர வேண்டும் என்றால் திறமையானவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது நிர்வாகிகளை குஷ்படுத்துவதற்காக புஸ்ஸி ஆனந்த் பேசிய விதம் பொதுவெளியில் விவாதபொருளாக மாறி உள்ளது

Exit mobile version