அக்டோபர் 4 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகளுக்கான கொரோனா விதிமுறைகளை இங்கிலாந்து அரசு வெளியிட்டு இருந்தது.
“இந்திய தடுப்பு மருந்துகளை செலுத்திக் கொண்டவர்களையும் இங்கிலாந்து வந்தால் 10 நாள் தனிமைப்படுத்துவோம்” என்று இங்கிலாந்து அறிவித்தது.அதை எதிர்த்து, “இங்கே உற்பத்தியாகும் கோவிஷீல்டை உங்கள் நாட்டில் ஆஸ்டிராசெனெக்கா என்ற பெயரில் மக்களுக்கு கொடுக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது ஏன் கோவிஷீல்டுக்கும் தடை?” என்று கேள்வி எழுப்பியதும் விழித்துக் கொண்ட பிரிட்டன்.
“கோவிஷீல்டு ஒப்புக் கொள்ளப்படும். ஆனால், அதற்கான கோவின் சான்றிதழை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று பல்டி அடித்தது.
கோவிஷீல்டு தடுப்பூசியை அனுமதிக்கவில்லை என்றால், இங்கிலாந்து பயணிகளுக்கும் அதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இந்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
டிஜிட்டலாக வழங்கப்படும் கோவின் சான்றிதழை குறை சொல்லும் பிரிட்டன் கைகளால் எழுதி கொடுக்கிறது கோவிட் சான்றிதழை! கோவின் தளத்தை பல நாடுகளும் வேண்டியதை அடுத்து அந்த நாடுகளுக்கு இலவசமாக கொடுத்துள்ளது பாரதம். என்றாலும், வெள்ளைக்காரனுக்கு இன்னும் இந்தியா அவர்கள் அடிமை என்ற நினைப்பு.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்து புதிய பயண விதிகளை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.
குறிப்பு: கோவாக்ஸின் உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கு காத்திருக்கிறது. அனேகமாக அக்டோபர் முதல் வாரம் அனுமதி கிடைக்கலாம். கோவாக்ஸினுக்கு இவ்வளவு பிகு பண்ணும் உலக சுகாதார அமைப்பு, ஃபைசர் / மாடர்னா / ஆஸ்டிராசெனக்காவுக்கு எந்த கெடுபிடியும் இல்லாமல் உடனே அனுமதி வழங்கியது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















