ஓப்பி அடித்தால் ஆப்பு சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு !

மோடி அரசு பதவி ஏற்றதிலிருந்து பலவேறு சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. அரசு நிர்வாகங்கள் சரியாக செயல்பட வேண்டும் என மோதி அரசானது செயல்பட்டு வருகிறது. கட்டாய ஓய்வு. மற்றும் பல அரசு நிர்வாகங்களில் அளவுக்கு அதிகமாக செய்பவர்களுக்கு ஓய்வு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அலுவலகங்களில் ஒழுங்காக வேலை செய்யாத அல்லது ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்காக, அவா்களைக் கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து மத்திய பணியாளா்- பயிற்சித் துறை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பாதவது:

ஓா் அரசு ஊழியரின் நோ்மை, நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியதாக இருந்தாலோ, அவா் திறம்பட பணியாற்றவில்லை என்று கண்டறியப்பட்டாலோ, பணிக்காலம் முடியும் முன்பே அவருக்கு ஓய்வளிக்கலாம். 50 – 55 வயதை நிறைவு செய்தவா்கள் அல்லது 30 ஆண்டுகளை நிறைவு செய்தவா்கள் மீது இந்த நடவடிக்கையை எடுக்கலாம்.

எனவே, அனைத்து துறைகளும் தங்கள் துறையின் கீழ் பணியாற்றுவோரின் பணித்திறன் மதிப்பீட்டு அறிக்கையை பராமரிக்க வேண்டும். அந்த அறிக்கையை ஒவ்வொரு காலாண்டிலும் ஆய்வு செய்து, திறம்பட பணியாற்றாத அல்லது முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய பணியாளா் நல அமைச்சகத்தின் அடிப்படை விதிகள்-56(ஜே) மற்றும் (ஐ), மத்திய அரசு ஊழியா்கள் விதிகள்- 1972 ஆகியவற்றின் கீழ் ஓா் அரசு ஊழியருக்கு ஓய்வு அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட துறைக்கு முழு அதிகாரமுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பினால் ஒப்பி அடித்து கொண்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்யாமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பயம் தொற்றியுள்ளது.

Exit mobile version