திமுக ஆட்சியை கலைத்து, நிர்வாகிகளை கொடுமைப்படுத்திய காங்கிரசுடன் திமுக கூட்டணி! அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கு

மோடி2.0 அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக பாஜக இன்று 25.06.2020 00 நடத்திய மெய் நிகர் பேரணியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு தில்லியில் இருந்த படி சிறப்புரை வழங்கினார்.  முன்னதாக முகப்புரை வழங்கிய தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு எல். முருகன் அவர்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜக ஆற்றிக் கொண்டிருக்கும் சமூக நற்பணிகளை விவரித்துப் பேசினார்.

 தமது உரையின் தொடக்கத்தில் தமிழ்நாடு  மாநிலத் தலைவர் எல். முருகன், முன்னாள் அமைச்சகர்  பொன் ராதாகிருஷ்ணன்,  முன்னாள் எம்.பி இல கணேசன், முன்னாள் பாநிலத் தலைவர்  சி பி ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர்   ஹெச் ராஜா,  மற்றும் நிவாகிகளுக்கு நன்றி தெரிவித்து தமது உரையைத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன். இந்தக் காணொளிப் பேரணி நடப்பதற்குக் காரணமாக எல்லா கிராமங்களுக்கும் ஃபைபர் ஆப்டிச்ச் தொழில் நுட்பத்தால் இணைய இணைப்பு கிடைத்திருப்பதையும், அது இந்த கொரோனா கால கட்டத்திலும் மக்களைச் சென்றடைய உதவுவதையும்கூறினார்.

அன்மையில் இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட சண்டையில் உயிர்தியாகம் செய்த தமிழ்நாட்டு வீரர் ஹவில்தார் பழனிக்கு  பாரத ஜனதாகட்சி சார்பில் அஞ்சலி செலுத்தினார்.

ஓராண்டு சாதனைகளை விளக்குவதற்கு முன்பாக நிதியமைச்சர் குறிப்பிட்ட முதன்மையான செய்தி, இன்று ஜூன் 25 ஆம் நாள்.  இதே நாளில்தான் நமது நாட்டின் கொடுமையான அரசியல் நிகழ்வான எமர்ஜென்சி, காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டததை நினைவுகூர்ந்தார்.  அந்த எமர்ஜென்சி காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக அரசை காங்கிரஸ் கலைத்தது.  அதுமட்டுமில்லாமல் பல எதிர்கட்சித் தலைவர்கள்,  தி.மு.க தலைவர் திரு சிட்டிபாபு உட்பட்ட பல திமுகவினரும் துன்பத்திற்கு ஆளானதைக் குறிப்பிட்டார்.   பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்படாத அந்த எமர்ஜென்சி காலகட்டத்தில் அப்போதைய தமிழ்நாடு ஜனசங்கத்தில் இருந்த   தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, கே. என். லட்சுமணன் இருவரையும் எமர்ஜென்சி காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் குறிப்பிட்டு, இத்தகைய எமர்ஜென்ஸி கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன் இனைந்து கொண்டிருக்கின்ற திமுகவைச் சாடினார்.

சாதனைப் பட்டியல்:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது பிரிவை நீக்கியது, ஜம்மு காஷ்மீரில், மற்ற இந்திய மாநிலங்களில் இந்திய மக்களுக்கு கிடைக்கின்ற அத்தனை உரிமைகளையும் உறுதி செய்த மிகப்பெரிய சாதனை.  இந்த 370 பிரிவு நீக்கம் என்பது தொடர்ந்து பாஜகவால் ஜன சங்க காலத்திலிருந்து மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை  நிறைவேற்றி,  பட்டியலின மக்கள், பெண்கள் மற்றும் பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு உட்பட்ட முழுமையான ஜனநாயக உரிமைகளை பெற்றுத் தந்த ஒரு மிகப்பெரிய சாதனை என்று இதனால் பெண்களுக்கு சொத்துரிமை மீட்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். 

இஸ்லாமிய நாடுகளிலேயே நீக்கப்பட்டிருக்கும் முத்தலாக் முறையை நீக்கி இஸ்லாமியப் பெண்களுக்கு நீதி வழங்குவதற்கான  சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நமது அண்டை நாடுகளில் மதரீதியாக துன்படுத்தப்படும் இந்திய வம்சாவளி மக்களுக்கு, இந்தியக் குடியுரிமை தருவதற்கான ஒரு சட்டத்திருத்தம் சிஏஏ மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  இது வெகுநாட்களாக அந்த நாட்டில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

400 வருடங்களுக்கு மேலாக பிரச்சினையாக இருந்த அயோத்தி ராமர் கோயில் பிரச்சினை நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டு, அதற்கான கோயில் கட்டும் பொறுப்பு அரசுக்கு நீதிமன்றத்தாலேயே அளிக்கப்பட்டிருக்கிறது.  இதைத் தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டுவதற்கான டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டு,  பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு, ஆலயம் கட்டப்படும் செயல்பாடு தொடக்கப்பட்டிருக்கிறது.

நமது நாட்டின் மொத்த வருவாயில் 17 சதவீதத்தை தருகின்ற விவசாயத் தொழிலுக்கு சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டிருக்கின்றன.  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விவசாயிக்கும் 6000 ரூபாய் அவரது வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது.  இதனால் நாட்டில் மொத்தம் 14 கோடி விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் 36 லட்சம் பேர் பயன் பெறுகிறார்கள்.

விவசாய அபிவிருத்திக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசாங்கம் ஒதுக்கி, விவசாயிகளுக்கு தேவையான பல கட்டமைப்புகளை செய்ய திட்டமிட்டிருக்கிறது.  குறிப்பாக அவர்களுக்கு தேவையான குளிர்பதனநிலையங்கள்,  பதப்படுத்துதல்,  கிராம சாலைகள்,  விவசாயம் தொடர்பான சிறுதொழில்கள் போன்றவற்றை அபிவிருத்திப் படுத்த இந்தத் தொகை திட்டமிடப்பட்டிருக்கிறது.

சுமார் 8000 கிலோ மீட்டர் கடற்கரையை கொண்ட நமது நாட்டு மீனவர்களுக்கு, மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன. அதில் 20,000 கோடி ரூபாய் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த கட்டமைப்பு மேம்படுத்தலில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பதப்படுத்தல்  மற்றும் மீன்பிடித்துறை இவை அடங்கும்.

சிறு குறு தொழில்களுக்கான கடனுக்காக 2019ஆம் ஆண்டில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக திட்டமிடப்பட்டிருக்கிறது.

தொழிலகங்களுக்கு வரிச்சுமையைக் குறைக்கும் விதமாக  கார்ப்பரேட் வரி 22 சதவீதமாகக். குறைக்கப்பட்டிருக்கிறது. புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு  மிகக் குறைந்த அளவில், மற்ற எந்த நாட்டிலும் இல்லாத அளவுவில் 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

உலகெங்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் கொரோனா நோய் தொற்றால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால், சிறுதொழில்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மூன்று மாதம் அவர்களுக்கான பிராவிடண்ட் பண்ட் தொகையை அரசே கட்டுகிறது. 

2019 ஆம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்ட தொழில் முனைவோருக்கு ஒரு ஓய்வூதியம் வேண்டும் என்ற அளவில் 3,000 ரூபாய் ஓய்வூதியம் அளிப்பதற்கு திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது,

எமர்ஜென்சி கிரெடிட் என்பதாக சுமார் 47 ஆயிரம் கோடிக்கு சிறு குறு தொழில்கள் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது,

மிகச் சிறிய அளவு முதலீட்டுத் தொழில்களுக்கு 2% குறைந்த வட்டியில் சிசு முத்ரா கடன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

சொத்துப் பினை இல்லாமல் கிரடிட் கேரண்டி முறையில் 4352 கோடி ரூபாய் கடன் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

சுமார் 12,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய 5133 திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த நிதி ஆண்டில் 3 மாதத்திற்குள் 6300 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு கொரோனா செலவினங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏழை நலன் (கரீப் கல்யான்)  திட்டத்தின் மூலமாக 44 கிலோ டன் தானியங்கள்  கொடுக்கப்பட்டிருக்கிறது

அனைவரின் ஜன்தன் கணக்கிலும் 1500 ரூபாய்  மாதம் 500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது

இலவச சமையல் வாயு திட்டத்தில் 41.16 கோடி இலவச சிலின்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சென்ற ஆண்டில் 10,535 கழிப்பறைகள் தமிழ்நாட்டில் கட்டப்படிருக்கின்றன.

கொரோனா காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்வதற்கு 240 சிறப்பு இரயில்கள் தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படிருக்கின்ரன.

சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தை விளக்கி நாம் நமக்கு தேவையான பல பொருட்களை இறக்குமதி செய்வதில் எந்த தவறும் இல்லை, ஆனால் மிக எளிதாக நாமே தயார் செய்து கொள்ளக்கூடிய பொருட்களையும் கூட இறக்குமதி செய்வது தவறு. அதன் காரணமாக பல பொருட்கள் நம்மால் தயாரிக்க கூடிய பல பொருட்களை நாமே தயாரிக்க வேண்டும் என்ற திட்டத்தில் சுயசார்பு பாரதம் என்பது  அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது

தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு மிகப் பிமாண்டமான டிபன்ஸ் எக்ஸ்போ,  பாதுகாப்புக் கண்காட்சி, மோடி அவர்களால்  துவக்கப்பட்டு நடத்தப்பட்டது.  இதுபோன்ற கண்காட்சி பொதுவாக டெல்லியில் நடத்தப்படும். சென்ற ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் இருக்கின்ற டிஃபன்ஸ் காரிடார் என்கின்ற ஒரு பாதுகாப்பு துறைக்கான பல தொழிற்சாலைகளை உருவாக்கும் திட்டம்  தமிழ்நாட்டில் 6 நகரங்களில்  உருவாக்கப்பட்டிருக்கிறது..
சாதனைப் பட்டியலை விவரமாக எடுத்துக் கூறிய நிதி அமைச்சரின் உரைக்குப் பின்னர்
 மாநில தலைவர் டாக்டர் எல். முருகன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Exit mobile version