கடந்த வருடம் வெளியான திரைப்படங்களில் முக்கிய இடத்தை பிடித்தது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ். இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வந்த பண்டிட்கள் சொந்த நாட்டிலேயே சொல்ல இயலாத சித்தரவதைகளை அனுபவித்து, சொந்த நாட்டிலேயே அகதிகளாய், நாடோடிகளாய், நாதி அற்றவர்களாய், திரிந்த உண்மை வரலாற்றை எடுத்துரைத்த படம் தான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் மூலம் நாடு முழுவதும் மிகப்பெரும் விவாதத்தை தாக்கத்தை ஏற்படுத்தியது இப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தற்போது, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்: அன்ரிபோர்ட்டட்’ என்ற புதிய வெப்சீரிஸை இயக்கியுள்ளார். இது ஜீ5 ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகியுள்ளது.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உருவாக்குவதற்கு முன்பு சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் காஷ்மீர் மோதலின் வரலாற்றை பற்றி கூறுவதாக இந்தத் தொடர் இயக்கி உள்ளதாக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளார் .
“காஷ்மீர் பண்டிட்கள் இனப்படுகொலை இந்தியா மீது மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதும் ஒரு கறை. இது இன்றைய காலகட்டத்தில் மறைக்கப்பட்டது மிகப்பெரிய தவறாகும். காஷ்மீர் பைல்ஸ் கதையை நேர்மையாக சொல்வது மிகவும் முக்கியமானது. அதுதான் எண்களின் நோக்கமாகும். 4 வருட விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் மக்களின் கண்களைத் திறந்தது காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம்.
ஆனால் படத்தைப் பற்றி எதிர்கருத்துக்களும் பார்வைகளும் இருந்தன – சிலர் படம் 10% மட்டுமே உண்மையை சித்தரித்ததாகக் கூறினார்கள் மற்றும் சிலர் தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு பிரச்சாரப் படம் என்று கருதினர்.” இதற்கு பதில் சொல்வது எங்களின் கடமை உண்மையை அந்த எதிர் தரப்பினரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் செய்த அனைத்து ஆராய்ச்சி மற்றும் நேர்காணல்களை தி காஷ்மீர் ஃபைல்ஸ்: அன்ரிபோர்ட்டட்’ என்ற வெப் சீரிஸிஸ் மூலம் வழங்கி உள்ளோம்
இந்த தொடர் கண்டிப்பாக உங்கள் இதயத்தை சிதைக்கும் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும், இதன் நோக்கம் வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், மேலும் பயங்கரவாதத்தை சகித்துக்கொண்டு இல்லாமல் அனைத்து மக்களுக்காகவும் மனித நேயத்திற்காகவும், நமது சொந்த மக்களுக்காகவும் நாங்கள் இருக்கிறோம் என்பதை காட்டவே இந்த தொடர் என கூறினார்.