உண்மையை மறைக்கும் ஊடகங்கள்… அதையும்‌ மீறி வெளிவரும்‌ ஊழல்‌…கிழித்தெடுத்த தங்கர்பச்சான்!

மழை வெள்ளத்திற்கு காரணம் யார் என்பது தான் இப்போது பெரிய ஹாட் டாபிக். இது குறித்து கட்சிகள் மாறி மாறி குற்றம் சுமத்தி கொண்டு வருகிறார்கள். இதில் மக்கள் பங்கும் உண்டு என்பதை இயக்குனர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

தேர்தலுக்காக மக்கள் காத்திருப்பதாகவும், பின்னர், தேர்தல் வாக்குறுதிகளையும், ரூபாய் நோட்டுகளையும் அரசியல் கட்சியினர் அள்ளி வீசுவதை மக்கள் பெற்றுக் கொண்டு, பிறகு மீண்டும் தேர்தலுக்காக மக்கள் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.அதாவது, ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் மக்கள்தான், சென்னையில் வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு காரணம் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

மேலும் ஊடகங்களின் நேர்மை தன்மை குறித்தும் விமர்சித்துள்ளார். இயக்குனரின் பத்திவு தற்போது வைரலாகி வருகிறது உண்மைகளை மறைக்கும்‌ ஊடகச்செய்திகள்‌.அதையும்‌ மீறி வெளிவரும்‌ ஊழல்‌ லஞ்சம்‌ குற்றச்சாட்டு. என குறிப்பிட்டுள்ளார், இது தி.மு.கவின் ஊழல்களை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருகிறார். ஆனால் ஊடகங்கள் அதை பற்றி பேசவில்லை. மின்துறை, போக்குவரத்து துறை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் ஊழல்களை அண்ணாமலை கூறினார். ஆனால் அதை பற்றி ஊடகம் வை திறக்கவில்லை.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-
ஆர்வத்துடன்‌ தேர்தல்‌ நாளுக்காக காத்‌திருக்கும்‌ மக்கள்‌.
தேர்தல்‌ நாள்‌ அறிவிப்புச்செய்தி.
அரசியல்‌ கட்சிகளின்‌ தேர்தல்‌ பரப்புரைகள்‌,
ஆர்வமூட்டும்‌ வாக்குறுதிகள்‌.
பணம்‌ எவ்வளவு எப்பொழுது கைக்கு வரும்‌
என காத்திருக்கும்‌ மக்கள்‌.
தேர்தல்‌ ஆணையத்தின்‌ சட்ட திட்ட அறிவிப்புகள்‌.
ஆர்வத்துடனும்‌ எதிர்பார்ப்புடனும்‌ வாக்களிக்கும்‌ மக்கள்‌.
பரபரப்பான தேர்தல்‌ முடிவுகள்‌.
புதிய ஆட்சி பதவியேற்பு.
மக்களின்‌ எதிர்பார்ப்பு.
ஆட்சி குறித்த மக்களின்‌ நம்பிக்கை.
எதிர்கட்டுகளின்‌ குற்றச்சாட்டு.

உண்மைகளை மறைக்கும்‌ ஊடகச்செய்திகள்‌.
அதையும்‌ மீறி வெளிவரும்‌ ஊழல்‌ லஞ்சம்‌ குற்றச்சாட்டு.
ஆட்சியின்‌ நேர்மையை பறைசாற்ற பாடுபடும்‌ ஆளும்‌
கட்சி. குறைகளை மட்டுமே கூறும்‌ எதிர்கட்சிகள்‌.
பண்டிகை நாட்களில்‌ மது பானங்களின்‌
விற்பனை கணக்கு.

மழை, வெள்ளம்‌, புயல்‌ காலங்களில்‌
அச்சத்தில்‌ உறையும்‌ மக்கள்‌. சாலைகளில்‌ படகு விடும்‌
காட்சி, வீடுகளுக்குள்‌ தண்ணீர்‌ தேங்கு நிற்கும்‌ காட்சி,
அரசியல்வாதிகள்‌ படைகளுடன்‌ நடந்து சென்று சோறு
ஆக்கிப்போட்டு ஆறுதல்‌ அளிக்கும்‌ காட்சி.
ஆளும்‌ கட்சி, எதிர்‌ கட்சி ஒருவர்‌ மீது இன்னொருவர்‌
குறைகூறிக்‌ கொள்ளும்‌ காட்சி.
ஆட்சியாளர்களின்‌ இலவசம்‌ மற்றும்‌ வறட்சி,
வெள்ளம்‌ நிவாரண அறிவிப்புகள்‌.
பொருட்களையும்‌ பணத்தையும்‌ வாங்குவதற்கு
இடம்பிடிக்கப்‌ போராட முந்திக்கொண்டு கல்‌ போட்டு
அடையாளம்‌ வைக்கும்‌ மக்கள்‌.
மீண்டும்‌, நம்பிக்கையுடன்‌ அடுத்த தேர்தல்‌ எப்பொழுது
வரும்‌ என காத்திருக்கும்‌ மானமிகு மக்கள்‌….!!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

தங்கர் பச்சானின் இந்த கருத்திற்கு சக இயக்குநரும், நடிகருமான சேரன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து சேரன் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “இது சுழற்சிதான்.. அந்த மானமிகு மக்களுக்கு தற்போதைய வாழ்க்கையை தற்காத்துக்கொள்ள போராடும் நிலை இருக்கும்போது எங்கிருந்து எதிர்கால சிந்தனை… அமர்பவர்கள்தான் அம்மக்களை ஏமாற்றாமல் செயல்பட உத்திரவாதம் கொடுக்கவேண்டும்.. விடியும் என்ற நம்பிக்கை உண்டு..,” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version