இந்தியாவிற்கு சும்மா கிடைத்துவிடவில்லை ஒலிம்பிக் பதக்கங்கள். கடந்த காலங்களில் இல்லாதது போல பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டுத்துறைக்கும், விளையாட்டு வீரர்களும் நிதி தாராளமாக தற்போது ஒதுக்கப்படுகிறது. உயரிய பயிற்சியும், பயிற்சியாளர்களும் உறுதி செய்யப்படுகிறார்கள்.
உதாரணமாக பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்ற மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானுவுக்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி அளிக்க மட்டும் மோடி அரசு ₹2 கோடி செலவு செய்துள்ளது. அந்த செலவை விட, அமெரிக்காவில் இந்த இடத்தில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மீராபாய் சானு மோடி அரசுக்கு விண்ணப்பித்த 6 மணி நேரத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மட்டுமின்றி கொரோனா காலத்தில் எந்த தடையும் இன்றி அங்கு செல்வதற்கு கூட அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிகளில் எல்லாம், குறிப்பாக மன்மோகன் சிங் ஆட்சியில் ஒப்புதல் கிடைக்க 6 மாதம் வரை ஆகுமாம், பல சமயம் ஒப்புதலே கிடைக்காதாம்.
தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு கோச்சாக உலகிலேயே மிகச்சிறந்த ஜெர்மனியை சேர்ந்த ஈட்டி எரிதல் வீரர் பார்டோனிட்ஸ் க்ளாஸ் என்பவரை ஏற்பாடு செய்தது முதல் அவருக்கு ஐரோப்பாவில் பல மாதங்கள் பயிற்சி அளிக்கும் வரை அனைத்து ஏற்பாடுகளையும், கோடிக்கணக்கான ரூபாய் செலவையும் பார்த்து பார்த்து செய்துள்ளது மோடி அரசு.
பேட்மிட்டன் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி சிந்துவுக்கு கொரியாவை சேர்ந்த கோச் உறுதி செய்யப்பட்டது முதல், வெளிநாடுகளில் உயர்தர பயிற்சி என கிட்டத்தட்ட ₹4 கோடி கடந்த சில மாதங்களில் மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணி சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொள்ள சென்ற போது வீரர்களுக்கு தரமான ஷீ வாங்குவதற்கு கூட அன்றைய காங்கிரஸ் அரசு நிதி ஒதுக்கவில்லை. ஆனால், இன்று அதே ஹாக்கி அணி 41 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளது.
இதற்கு தரமான பயிற்சி, வசதிகளை காட்டிலும், TOPS எனும் திட்டத்தின் மூலம் அனைத்து ஹாக்கி வீரர்களுக்கு மோடி அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக மாதாமாதாம் வழங்கிய ₹50,000 ஊக்கத்தொகை மிகப்பெரிய காரணம் என தெரிய வருகிறது.
இந்த ஊக்கத்தொகையின் மூலம் ஹாக்கி வீரர்களின் வீடுகளில் “நீ மாதாமாதம் சம்பாதிக்கவில்லையே, உன்னால் இந்த வீட்டிற்கு ஒரு லாபமும் இல்லையே!!” என்ற பேச்சு நின்றுப்போனதாக ஹாக்கி வீரர்கள் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கின்றனர்.
விளையாட்டுத்துறைக்கு பட்ஜெட் அதிகப்படுத்தியது மட்டுமின்றி, கேலோ இந்தியா எனும் இந்தியாவின் மூலை முடுக்கில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து விளையாட்டு போட்டிகளும் தயார் செய்யும் திட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 9 மடங்கு நிதி அதிகமாக, மொத்தம் ₹890.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் பதக்கங்களை பெற்றதற்கான புகழ் வீரர்களை மட்டுமே சாரும், ஆனால் கடந்த கால அரசாங்கங்கள் போல் மெத்தனமாக இல்லாமல், விளையாட்டு வீரர்களுக்கு ஒரு தந்தை போல உடனிருந்து ஊக்கமளிக்கும் பிரதமர் மோடியும், அவரின் தனி கவனமும் அரசியல் பாகுபாடுகள் கடந்து போற்றப்பட வேண்டும். இவ்வாறான மகத்தான செயல்களை பாராட்டாமல் போனால், காலம் மன்னிக்காது.- எஸ்.ஜி. சூர்யா பாஜக செய்தி தொடர்பாளர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















