பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

கோயம்பத்தூர் மாநகராட்சி பூங்காவுக்கு 83 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இதை பொது இடமாக அறிவித்து கோவை மாநகராட்சியிடம் பொது ஒதுக்கீடாக, ஒதுக்கப்பட்டது.இரு இடங்களில் பூங்காவுக்கு மொத்தமாக 83 சென்ட் ஒதுக்கப்பட்டது.

அதில் பூங்காவுக்கு ஒதுக்கிய, 52 சென்ட் இடத்தில் கிரவுணட் இடத்தை 2,500 சதுரடியை சில அரசியல்வாதிகள் கூட்டுடன் ஆக்கிரமித்து, கூடாரம் அமைத்து, இறகுபந்து விளையாட பயன்படுத்தி வந்தனர்.

அதற்கு அங்கு கட்டணம் கட்டி விவிளையாட அனுதித்து தனியார் விளையாட்டு மையம் போன்று செயல்பட்டு வந்தது .

இது ‘ரிசர்வ் சைட்’ இதை ஆக்கிரமித்துள்ளனர் ஆக்கிரமிப்பை உறுதி செய்த மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

முக்கிய கட்சி தரப்பில் அழுத்தம் கொடுத்ததால், ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர் .இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் கடிதம் அனுப்பினர்.

பிரதமர் அலுவலகத்திலிருந்து கோவை மக்கள் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், நடவடிக்கை குறித்து பதில் அறிக்கை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பவும் , தமிழக தலைமை செயலருக்கு உத்தரவிடப்பட்டது.

பிரதமர் அலுவலக உத்தரவை தொடர்ந்தும் தலைமை செயலர் அறிவுறுத்தியதை தொடர்ந்தும், கோவையில் ஆக்கிரமிப்பில் இருந்த, ‘ரிசர்வ் சைட்’ நேற்று அகற்றப்பட்டது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் பேசுகையில் ,’ஜி.கே.டி. நகரில் பூங்காவுக்கான, 52 சென்ட் இடத்தில், 2,500 சதுரடியை ஆக்கிரமித்து, அப்பகுதியினர் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைத்திருந்தனர்.

ஆக்கிரமிப்பை அகற்ற அளித்த அழுத்தத்தை தொடர்ந்து, கூடாரத்தை அகற்றியுள்ளனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும்,” என்றார்.

Exit mobile version