மீண்டும் திறக்கப்பட்ட பாரதமாதா சிலை ! சாதித்து காட்டிய கன்யா குமரி தேசபக்தர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம், பூவியூர் கிராமத்தில் உள்ள பாரதமாதாவின் சிலையை மூடிமறைத்து சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் செயலில் இறங்கி, கன்னியாகுமரி காவல்துறை அதிகாரி, தம்மை தேசத்தின் அடையாளைத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபடுத்திக் கொண்டார்! பாரத நாட்டின் அடையாளச் சின்னமாகத் திகழும் பாரதமாதாவின் சிலை, அருகிலுள்ள கிறிஸ்தவர்களின் மத உணர்ச்சிகளை புண்படுத்தியதாகப் புகார் கூறப்பட, நாட்டின் தேசிய அடையாளத்தை துணி போட்டு மூடி மறைக்க எப்படித்தான் அந்தக் காவலர்களுக்கு துணிவு வந்ததோ? தமிழகத்தில், சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் மத்தியில் அதிகரித்து வருவது பெரும் அபாயகரமான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. காவல்துறை தாங்கள் அரசியல் எஜமானர்களுக்கு அடிபணியப் போய், நாட்டின் சாமானியர்களை வெகுவாக சாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள தென் தாமரைக்குளம் வட்ட பூவியூர் கிராமத்தில், இசக்கி அம்மன் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. பாரதமாதா சிலை அதன் வளாகத்திற்குள் உள்ளது. இது தனியார் நிலத்தில் உள்ளது. அண்மையில் அந்தக் கோயிலுக்குச் சொந்தக்காரர்களான ஒரு குடும்பத்தினர் பாரதமாதாவின் சிலையை நிறுவி அதை மூவண்ணச் சேலையால் அலங்கரித்தனர். இதை அடுத்து, அந்த கிராமவாசிகளும் சேர்ந்து பாரதமாதாவை வணங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், திடீரென துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தனது துறை அதிகாரிகளுக்கு பாரத மாதா சிலையை மறைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து, அங்குள்ள எஸ்.ஐ., அந்தச் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சம்பந்தப் பட்ட கோயில் நபர்களுக்கு உத்தரவிட்டார். உள்ளூர் டி.எஸ்.பி., பாரத் மாதா சிலையை யாரும் வணங்கக் கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டார். இவை எல்லாவற்றையும் கடந்து, மே 21 ஆம் தேதி பாரத மாதா சிலையை, நீல வண்ணத் துணியால் மூடியே விட்டார்கள் போலீஸார்.

இந்நிலையில், பாரத மாதா சிலையை மூடிமறைக்கப் பட்டதைக் கேள்விப் பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் மே 22 அன்று அந்த இடத்தில் ஒன்று கூடி சிலையை மூடிய துணியை அகற்றினர். அவர்கள் அதற்கு மாலை அணிவித்து பாரத மாதாவை வணங்கினர். மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜாவும் கலந்து கொண்டார். உடனே காவல்துறை அந்த இடத்திற்கு சென்று பாஜகவினரை கைது செய்தனர்.
இதற்கு மாநிலம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழ தொடங்கின.

இந்த நிலையில் பாரதமாதா சிலை தேச பக்தர்கள் மற்றும் பாஜகவின் பெரும் முயற்சிக்குப் பின் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா காட்டுவிளை பாரதமாதா சிலை திறப்புவிழா இன்று காலை நடைபெற்றது முன்னதாக, கன்னியாகுமரி தென்தாமரைகுளம் புவியூரில் காவல்துறையால் மூடபட்ட பாரதமாதா சிலையை திறக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை ஒட்டி இன்று காலை 10 மணிக்கு பாரதமாதா சிலை திறக்கப்பட்டது. பின் பாரத மாத சிலைக்கு அபிஷேகம் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைமாவட்ட தலைவர் தர்மராஜ் சிலையினை திறந்து வைத்து பாலால் அபிஷேகம் செய்து பாரத மாதாவிற்கு மாலை அணிவித்தார்.

Exit mobile version