ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #பதில்சொல்திமுக.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த GST கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழ்நாடு சார்பில் நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.

டிஆர் பழனிவேல் தியாகராஜன் அதற்கான காரணத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி மிகத் தாமதமாக தெரிவிக்கப்பட்டது. 17ம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், பத்தாம் தேதிக்கு மேல்தான் தகவல் கூறப்பட்டது.

எனக்கு ஏற்கனவே பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பு கொண்டிருந்தேன், ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக இருக்கிறோம். எனவே எல்லாவற்றையும் சேர்த்து வைத்து GST கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சப்பை கட்டு காட்டினார்.மேலும் 3 பிளைட் மாறி செல்லவேண்டும் என்றெல்லாம் கூறினார்

இதனிடையே எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தமிழக நிதி அமைச்சரை வச்சு செய்துவிட்டார்கள். ‘

மீண்டும் ஊடகங்களை சந்தித்து தவறான பல தகவல்களை அளித்த அமைச்சரை தமிழக நிதி அமைச்சரை பாஜக தலைவர் அண்ணாமலை கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் சொல்லவில்லை என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை தமிழக முதல்வருக்கும் நிதி அமைச்சருக்கும் எழுப்பியுள்ளனர். இதனால் தற்போது ட்விட்டரில் #பதில்சொல்திமுக என்று ட்ரெண்ட் ஆகிவருகிறது.

Exit mobile version