உலக சுகாதார அமைப்புடன் உறவை துண்டித்த அமெரிக்கா! ட்ரம்ப் அதிரடி !

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் உலகம் முழுவதும் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். இந்த கொடிய கொரோனா துவங்கிய இடம் சீனாவின் ஊகான் நகரம் ஆகும். இந்த நிலையில் சீனா இந்த நோயின் தீவிரத்தை பற்றி முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டது. அதை உலக சுகாதார அமைப்பும் ஏற்று கொண்டது. கொரோனா வைரஸ் தாக்குதலில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா.

கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ.3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தினார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில்
உலகம் முழுவதும் கொரோனா வைரசை பரப்பிய சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளது. ஆண்டிற்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது.இது தவறு உடனே திருத்திக்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பினை வலியுறுத்தியும் செவி சாய்க்கவில்லை.

இனி அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்கிறது. அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை வேறு சுகாதார அமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version