நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையை கருத்தில்கொண்டு பதவியை கடந்த ஜூலை 21ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தொடங்கிய அன்றைய இரவே,ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்ததார்.இதனை தொடர்ந்து அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற பரபரப்பும் அப்போது முதலே தொற்றிக்கொண்டது.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பாரத நாட்டை ஆளும் பாஜக தலைமையினால் ஆன தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை இறுதி செய்வதற்காக கூட்டப்பட்ட பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும்,தற்போதைய மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தச் சூழலில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் என்டிஏ கூட்டணியின் வேட்பாளராக குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரே இத்தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவது ஏறத்தாழ உறுதி எனலாம்.இருப்பினும் இந்தியா கூட்டணி எதிர் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை சந்திக்கிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,’என்னை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ததற்காக பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜ தலைவர் நட்டா,பார்லி குழு உறுப்பினர்கள்,மத்திய அமைச்சர்கள்,தேஜ கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததை நினைத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சியடைந்தேன். என் கடைசி மூச்சு வரை நாட்டிற்காக கடினமாக உழைப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















