தமிழக பா.ஜ.கவில் நிறைய முதல்வர் வேட்பாளர்கள் உள்ளார்கள்! தி.மு.கவுக்கு சவால் விட்ட அண்ணாமலை..முழு வீடியோ உள்ளே..

Annamalai

Annamalai

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பா.ஜக.வில் 10 முதல் 15 பேர் முதலமைச்சர் நாற்காலிக்கு பொருத்தமானவர்கள் இருக்கிறார்கள் இது போல் மற்ற கட்சி கூற முடியுமா என நேரடி சவால் விடுத்தார். மேலும் நான் தமிழக பாஜகவை வளர்க்க தான் இருப்பதாகவும் எனக்கு முதல்வர் கனவெல்லாம் கிடையாது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் பதவி ஆசையில் இருப்பவர்கள் பாஜகவை பார்த்து குற்றஞ்சாட்ட எந்த தகுதியும் இல்லாதவர்கள் என்றும் பாஜகவில் யாருக்கும் பதவி ஆசை கிடையாது தங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் கொள்கைக்காவும், மாற்றத்துக்காகவும் தான் இருக்கிறார்களே தவிர வேறு எதற்காகவும் இல்லை எனத் தெரிவித்தார்.

தமிழக பாஜகவை பொறுத்தவரை தன்னைக்காட்டிலும் முதலமைச்சர் நாற்காலிக்கு 10 முதல் 15 பேர் பொருத்தமானவர்கள் இருக்கிறார்கள் என்று கூறிய அண்ணாமலை, திமுகவில் ”இவரை தவிர வேறு யாராவது ஒருவரை முதலமைச்சர் நாற்காலிக்கு பொருத்தமானவர் எனச் சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்” என எதிர்கேள்வியும் எழுப்பினார். பாஜகவில் தாம் சிங்கிள் லீடர் கிடையாது என்றும் தன்னைப் போலவே பல தலைவர்கள் இருப்பதாகவும் கூறினார்.

முதல்வா் கனவில் நான் இல்லை. கட்சியை வளா்ப்பது, தலைவா்களை உருவாக்குவது மட்டுமே எனது முதன்மையான பணி. பாஜகவில் ஒரே தலைவா் என்பதற்கு இடமில்லை. மக்களவைத் தோ்தலை பொறுத்தவரை மிகப்பெரிய எழுச்சி இருக்கும். மீண்டும் மோடி பிரதமராவாா் என்றாா்.

பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி மோடி திருச்சி வந்தார். ஒரே மாதத்தில் 2வது முறையாக தமிழ்நாடு வருகிறார். சென்னையில் கேலோ இந்தியா தொடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பிறகு ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில்களுக்கு செல்கிறார். அயோத்தி செல்வதற்கு முன்பு பிரதமர் தமிழ்நாடு வருவதில் மகிழ்ச்சி.

மேலும் ராமர் கோவில் பற்றி பேசுவதற்கு எந்த உதயநிதிக்கு எந்த தகுதியும் இல்லை. மைச்சர் சேகர் பாபு முதலமைச்சருக்கு ராமாயணத்தை பரிசாக கொடுத்தார். படிப்பது ராமாயணம். இடிப்பது பெருமாள் கோயில் என்று சொல்வது போல திமுக கார்ரகள் ராமாயணம் படித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல கோயில்களை இடித்துவிட்டனர். மக்கள் கொந்தளிப்பால் கோயில்களை இடிப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்.

பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் பணியாற்றி வந்த பட்டியலின சகோதரி வெளியில் வந்து பேட்டியளித்துள்ளார். ‘என்னை அடிமைப்படுத்தினர். சிகரெட்டால் சூடு வைத்தார்கள்.

ரூ.15,000 சம்பளம் தருவதாக சொல்லி ரூ.5,000 மட்டுமே கொடுத்தனர்.’ என்றெல்லாம் சொல்லியுள்ளார். சமூகநீதி பேசும் திமுக எம்எல்ஏ மகன் வீட்டிலேயே இப்படி நடந்துள்ளது. அவர் வெளிப்படையாக சொல்லியும் வழக்குப்பதியாமல் இருக்கின்றனர்.

என பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

Exit mobile version