இந்துக்களுக்கு என்றும் ஒற்றுமை என்று ஒன்று இல்லை…

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களிடம் இருந்து பத்து கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்திருந்தது.

அதேசமயம் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழகத்திலுள்ள மசூதிகளுக்கு இலவசமாக அரிசி வழங்குவதாகவும் தமிழக அரசு அறிவித்தது.

திருக்கோவில்களில் உண்டியல் மூலம் வரும் பணத்தை வைத்து அந்தந்த கோவில்களிலேயே ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதே சிறந்தது. ஊரடங்கு உத்தரவினால் பல ஏழைகள் பசியோடு இருக்கும் தருணத்தில் திருக்கோவில்கள் மூலம் உணவளிப்பது சரியாக இருக்கும் என்று பல ஆத்திகர்கள் கருத்து தெரிவித்தனர்.

திருக்கோவில் உண்டியல் பணத்தை எடுத்து மசூதிகளுக்கு இலவசமாக அரிசி வழங்குவதா என்று சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

அரசின் சுற்றறிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழங்கும் தொடரப்பட்டது.

வழக்கு பற்றி டி ஆர் ரமேஷ் அவர்களிடம் விசாரித்தபோது,

“இன்று சென்னை உயர்நீதி மன்ற – பொது நல வழக்கு அமர்வு முன்பாக – கோயில் பணம் ₹10 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதை எதிர்த்து என் வழக்கு வந்தது.

விசாரித்த நீதிபதிகள் வரும் வெள்ளிக்கிழமை வரை ஆணையர் தம் சுற்றறிக்கை மீதி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டு, அரசு நீதி மன்றம் முன்பாக தெரிவித்த படி 22.04.2020 தேதியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப் படுகிறது என்று பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளது.

இளம் வழக்கறிஞர்கள் நிரஞ்சன் ராஜகோபால், அபினவ் பார்த்தசாரதி, பிரஹலாத் பட் ஆகியோருக்கு மிக்க நன்றி.” … என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, Dr டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் பல இந்து அமைப்புகள் அரசின் இந்த நடவடிக்கையை கண்டனம் செய்தனர்.

இதையடுத்து இன்று, நிர்வாக காரணங்களுக்காக அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்தது.

Exit mobile version