வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதே கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது. தமிழகத்தை ஆளும் திமுகவுக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இதனிடையே விஜயின் அரசியல் வருகை எனபது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணித்து வரும் திருமாவளவன் கூறியிருப்பது தமிழக அரசியல் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திடீரென்று அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருகிறது. இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது.
“விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்ப விடுத்தாலும் கூட அதனை தேர்தலுடன் ஒப்பிட வேண்டாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். இருப்பினும் கூட அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கும் திருமாவளவனின் இந்த பேச்சு என்பது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு தற்போது ஆளும் கட்சியாக தமிழகத்தில் திமுக தான் உள்ளது.
இதனால் இந்த மாநாடு மூலம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரும் வகையில் திமுகவுக்கு தான் அழுத்தம் கொடுக்கப்பட உள்ளது. இதனால் திருமாவளவனின் நிலைப்பாடு என்பது மாறி விட்டதா? அவர் அதிமுகவுடன் கைகோர்க்க தயாராகிவிட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.
மேலும் 2026 ஆம் ஆண்டு வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்கும்படி திமுகவிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார் திருமாவளவன். ஆனால் இந்த கோரிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை திருமாவை கழட்டிவிட திமுக தலைமை ஆயத்தமாகி வருகிறது என்ற தகவல் திருமா காதிற்கு எட்டியது.
அதுமட்டுமில்லாமல் திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டத்தின் போது அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறும் என பேசினார். இதற்கிடையே உதயநிதி தலைமையில் நடந்த திமுக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு சீட்களை குறைத்து விட்டு திமுக அதிக இடங்களில் போட்டியிடவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் திருமா யூடர்ன் அடித்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் இது திமுகவிற்கு அதிர்ச்சியாகவும் விசிகவிற்கு இன்ப அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது