தமிழ் சினிமாத்துறையில் எந்த ஆட்சி வருகிறோதோ இல்லையோ திமுகவுக்கு சாதகமாக பேசுவது தான் வழக்கம், அதிமுக ஆட்சியில் எந்த சிறு பிரச்சனை என்றாலும் உடனே குரல்கொடுத்து அதை பூதகரமாக்கி விடுவது தான் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் வேலையாக இருந்தது.
ஜெயலலிதா இருக்கும் வரை அனைத்தையும் மூடி கொண்டு இருந்த சில சினிமாகார்கள் ஜெயலலிதா இறந்தவுடன் தங்களின் வீரத்தை காட்ட ஆரம்பித்தார்கள். இது தான் தமிழ் சினிமாக்காரர்களின் வீரம். அதுவும் இந்த சூர்யா,நாசர்,சிவக்குமார் சத்யராஜ் போன்றவர்கள் தான் இதில் முதலிடம்.
இந்த நிலையில் , கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ‛கலைஞர் 100′ நிகழ்ச்சியில் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினி நடிகர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜிகணேசனை கருணாநிதி தான் உருவாக்கினார் என கூச்சப்படாமல் மேடையில் பேசினார். இதனால் ரஜினி மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.இதற்கு எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ரசிகர்கள் ஆதரவாளர்கள் ரஜினியை கிழித்து தொங்கவிட்டுள்ள சம்பவம் தான் இன்றைய ட்ரெண்ட்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100′ என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம்நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், ”சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டார் ஆக்கியவர் கருணாநிதி. சாதாரண நடிகராக இருந்த எம்ஜிஆரை பெரிய வெற்றிப் படங்களை கொடுக்க வைத்தவர். அவர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆரை கருணாநிதி உருவாக்கி இருப்பார்.” எனப் பேசியிருந்தார்.
ரஜினியின் பேச்சுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது: மிஸ்டர் ரஜினி காந்த்! ஏதோ ‘கருணாநிதி 100’ விழாவுக்கு போனோமா, கருணாநிதியை பற்றி பேசினோமா.. உங்கள் வாழ்வுக்கும் வளத்துக்கும் எதையும் செய்து கொண்டு போகலாம்.. அதை பற்றி கவலை இல்லை.. ஆனால் எம்ஜிஆர், சிவாஜியையே உருவாக்கியது கருணாநிதி தான் என பேசியது உங்களுக்குள் ஏதோ சிஸ்டம் சரியில்லை என நிரூபணம் ஆகிறது.
எம்.ஜி.ஆர் திமுகவை காப்பாற்றினாரா இல்லை திமுக எம்.ஜி.ஆரை காப்பற்றியதா என இந்த உலகமே அறியும்,. கருணாநிதி இல்லை என்றால் எம்.ஜி.ஆர் இல்லை என்பது எந்த விதத்தில் நியாயம். அப்போ நீங்க சூப்பர்ஸ்டார் பட்டம் பெறுவதற்கு யார் காரணம். உங்களின் உழைப்பு இல்லையா? உங்களுக்கு தான் நடிப்பு திறமை இல்லையா?
சிவாஜியை உருவாக்கியது கருணாநிதியா? படத்தை உருவாக்கியது, இயக்கியது, கதை எல்லாம் எவரோ செய்தது; வசனம் மட்டும் சம்பளம் வாங்கி எழுதியதால் சிவாஜியை உருவாக்கி தந்துவிட்டாரா? அப்போ கருணாநிதி வெற்றிச் சித்திரம் எவை? கருணாநிதிக்கு புகழ் வந்ததே பராசக்தி மூலம் தான். அதன் பின் மனோகரா உச்சம் தொட்டது. அவை இரண்டுமே சிவாஜியின் நடிப்பும் வசனம் பேசியதும் தான்.
சிவாஜிக்கு கருணாநிதி இல்லாமல் எத்தனையோ வெற்றி படங்கள் குவிந்துள்ளன. கட்டபொம்மன் தான் வசனத்தின் உச்சம். அது கருணாநிதியின் வசனம் அல்ல. அதே போல எத்தனை எத்தனை படங்களும் வசனங்களும் உள்ளன. சிவாஜியை கருணாநிதி தான் உருவாக்கினார் என்றால் அதன் பின் எவரையும் அதே போல ஏன் உருவாக்கவில்லை? ஏன் சொந்த மகன் மு.க.முத்துவை உருவாக்க முடியவில்லை?
கருணாநிதி எழுதியது அவ்வளவு உயர்வு என்றால் அவரது வசனத்தில் ஒரு படம் கூட ரஜினி ஏன் நடிக்கவில்லை? உளியின் ஓசை அல்லது கருணாநிதி ஆசையாக எழுதிய வாலிப விருந்து படத்தில் ரஜினி நடித்து இருக்கலாமே.. அவர் மட்டும் நடிக்க மாட்டாராம்.. ஆனால் எல்லோரையும் அவர் தான் உருவாக்கினார் என பேசுவாராம்.. நல்லவேளை ரஜினி சார்.. நீங்க அரசியலுக்கு வரவில்லை… உங்களை எதிர்பார்த்த நாங்க தப்பித்தோம். இவ்வாறு நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி பற்றி, நடிகர் சிவாஜிகணேசன் அளித்த பேட்டியின் தொகுப்பு தற்போது வைரலாகியுள்ளது. அதில் சிவாஜி கூறியிருப்பதாவது: கருணாநிதி இப்போது என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியாது. என்னையும், எம்ஜிஆரையும் கருணாநிதி தனியாக விமர்சனம் செய்கிறார். எங்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசும் அவசியம் அவருக்கு வந்துவிட்டது.
நடிகர்கள் அரசியல் பேசலாமா? என்று கேட்கிறார். கருணாநிதி மட்டும்தான் அரசியல் பேச வேண்டும் என்றால், அவருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. அவர் வசனத்தை நான் பேசியதால் தானே கருணாநிதிக்கு பெருமை ஏற்பட்டது. எனக்கும், எம்ஜிஆருக்கும் கருணாநிதியின் அரசியல் எப்படிப்பட்டது என்று தெரியும். இவ்வாறு அவர் பேசியிருந்தார். அவரது பேச்சு அடங்கிய நாளிதழ் தொகுப்பும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.