இதற்குதான் தேவை டபுள் இஞ்சின்! யமுனை நதி நீர் பிரச்சனை! பல ஆண்டுகளுக்கு பிறகு சுமுக முடிவு!

Haryana, Rajasthan sign agreement for Yamuna water

Haryana, Rajasthan sign agreement for Yamuna water

தமிழகம் கர்நாடக காவேரி பிரச்சனை போல்ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் இடையே யமுனை நதி நீரை பகிர்வதில் 30 ஆண்டுகளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இதற்ககு முக்கிய காரணமாக மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவின் ஆட்சி நடைபெறுவதால் இது சுமுகமாக முடிந்துள்ளது.

மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு பல ஆண்டுகளாக நீடித்து வந்த பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. ராமர் கோவில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து புதிய கல்வி கொள்கை திட்டம் என பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

, தற்போது ராஜஸ்தான் – ஹரியாணா மாநிலங்களின் பாஜக மாநில அரசுகள், மத்தியில் ஆளும் பாஜக அரசின் முன்னிலையில், யமுனை நதி நீரை பகிர்ந்து கொள்ளும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கின்றன. 1994 முதல் இழுபறியில் இருக்கும் இந்த விவகாரம் தற்போது சுமூக முடிவை எட்டியுள்ளது.

ஹரியானாவின் ஹத்னிகுண்டில் இருந்து ராஜஸ்தானுக்கு யமுனை நீரை நிலத்தடி குழாய்கள் மூலம் மாற்றுவதற்கும், அதன் பிறகு ஜுன்ஜுனு மற்றும் சுரு போன்ற பகுதிகளில் இத்திட்டத்தை விரிவு படுத்துவதற்கும் சுமூக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா இடையே இன்று நடைபெற்ற சந்திப்பை அடுத்து, மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால், ராஜஸ்தானின் சுரு, சிகார் மற்றும் ஜுன்ஜுனு மாவட்டங்களின் குடிநீர்த் தேவைகள் பூர்த்தியாகும். மே 12, 1994-ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் இருந்து, சுமார் 30 ஆண்டுகளாக இழுத்தடிப்பில் இருந்த இந்த பிரச்சினைக்கு தற்போது முடிவு காணப்பட்டுள்ளது. தொடர்புடைய 2 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி, மத்தியிலும் பாஜக ஆட்சி என ட்ரிபிள் இஞ்சின் சாதனையாக யமுனை நதி நீர் பங்கீடுக்கு இணக்கமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்திற்கும் கார்நாடகாவிற்கும் இடையே உள்ள காவேரி நதி நீர் பங்கீட்டிலும் பாஜக அரசு இருக்கும்போது பெரிய அளவில் பிரச்சனைகள் எழவில்லை. ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வந்ததுமே காவேரி பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version