சீறிய இந்தியா பம்மிய சீனா பேசி தீர்த்துக்கொள்வோம் மண்டியிட்ட சீனா!

இன்று உலகமே உற்றுநோக்கும் இருநாடுகள் சீனாவும் இந்தியாவும் கொரோனா வைரஸை உலகிற்கு பரவ செய்தது சீனா என்ற குற்றச்சாட்டால் அந்த நாட்டில் முதலீடு செய்த நாடுகள் அனைத்தும் வெளியேற தொடங்கியுள்ளது, அந்த வெளியேறிய நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சீன இந்தியா எல்லையில் சீனர்கள் அவர்களின் படையை குவித்து வருவது.

உலகமே கொரானா தொற்றை சமாளிக்க திணறி வரும் வேளையில் சீனர்கள் அதன் அண்டை நாடான இந்தியாவின் மீது கவனம் செலுத்துவது ஏன். சீன முதலில் இந்தியாவை சீண்டிப்பார்க்கும் , சீண்டிப் பார்த்ததின் பின் விளைவை யோசித்த பின் பின்னங்கால் பிடரி அடித்து ஓடும், இதை பல வேலைகளில் உணர்ந்துள்ளனர் , மீண்டும் அவர்கள் சீண்டுவது ஏன் ? காரணம் தெளிவாக உள்ளது , நேபாள பிரச்சனையையும் லடாக் எல்லைப் பிரச்சினையையும் தான்

2014 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சீனாவின் கனவு திட்டமான முத்துமாலை சிதறடிக்கப்பட்டது. தற்சமயம் அவர்களுடன் பாகிஸ்தானின் துறைமுக பணி மட்டுமே உள்ளது அவர்கள் திட்டமிட்ட இலங்கை மற்றும் இதர நாடுகளின் மூலமாக திட்டமிடப்பட்டிருந்த பணிகளை நாம் முறியடித்து முத்து மாலையை சிதறவிட்டது இந்தியா. அதற்கு பின்பு அவர்களின் இன்னொரு கனவு திட்டமான பட்டு பாதையை நிறுத்தியது மோடி சர்க்கார்.

மேலும் இந்த கொரானா விவகாரத்தில் உலகநாடுகளில் சீனாவை தள்ளி வைத்துள்ளதும், அங்கு முதலீடு செய்த கம்பெனிகள் வேறு ஒரு நாட்டை நோக்கி நகர்வதும் அங்கு சூழ்நிலையை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சீனாவில் பொருளாதார நிலையும் கீழே சென்று கொண்டுள்ளது இதையெல்லாம் எப்படி சரி செய்வது அதற்கு,ஏதாவது ஒரு சப்பை கட்டு கட்ட வேண்டுமல்லவா அதற்குத்தான் சீனா கையில் எடுத்த விவகாரம் இந்தியாவை சீண்டிப் பார்ப்பது .

இந்திய சீன எல்லையான லடாக் அருகே தன்னுடைய படைகளை விரைவாக அனுப்பி நிலைமையை வேகமாக பரபரப்புக்கு உள்ளாக்கியது சீனா . அனைத்தையும் வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை மோடி அரசு , சரியான நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது.

அது மட்டுமில்லமால் இந்தியாவுக்கு அதிகப்படியாக இராணுவ ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதால், தான் உபயோகித்து வரும் ஹெலிகாப்டர்களை அமெரிக்கா இந்தியாவுக்கு கொடுத்துள்ளது. இந்தியா ஆர்டர் செய்திருக்கும் ஹெலிகாப்டர்கள் வந்ததும், இந்த ஹெலிகாப்டர்கள் திருப்பி அனுப்பபடும்.

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இரு நாட்டு துறைமுகங்களை இராணுவ / கடற்படை தேவைகளுக்காக உபயோகித்துக் கொள்ள ஒப்பந்தம். ஆஸ்திரேலியாவில் இந்திய கடற்படை கப்பலும், இந்தியாவில் ஆஸ்திரேலிய கடற்படை கப்பலும் விரைவில் நம்முடன் கைகோர்க்கிறது.

மேலும் இந்தியா படைகளை குவித்த வண்ணம் இருப்பதால் செய்வதறியாமல் திகைத்த சீனா யாரவது இது குறித்து பேசுவார்கள் அப்போது சமாளித்து பின்வாங்கலாம் என்றிருந்த நிலையில் தான் டிரம்ப் இந்தியா சீனா இடையே சமரசம் செய்ய தாயார் என சொல்லிய அடுத்த நிமிடம் சீன சீனாவும் இந்தியாவும் எதிர்களல்ல, ஒருவரை ஒருவர் வாய்ப்புகளாக (opportunities) பார்க்கிறோம். சீன டிராகனும் (Dragon) இந்திய யானையும் ஒன்றாக நடனமாடுவோம்” – என இந்தியாவிடம் பம்மியது.

பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான், இதுகுறித்து கூறியதாவது:

இந்தியா, சீனா இடையேயான உறவில், இரு நாட்டுத் தலைவா்களின் முன்னிலையில் (இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங்) இரு நகரங்களில் (வூஹான், மாமல்லபுரம்) நடைபெற்ற சந்திப்புகளின்போது முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்துடன் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த ஒப்பந்தங்களை சீனா அப்படியே முழுமையாகப் பின்பற்றி வருகிறது. எல்லையில் அமைதியையும், இணக்கமான சூழலையும் ஏற்படுத்த நம்பிக்கையூட்டும் விஷயங்களைத் தொடங்க வேண்டும் என்று இரு நாட்டு ராணுவத்தினரையும் கேட்டுக் கொள்கிறோம்.

எல்லையைக் காக்க வேண்டும்; எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் சீனா உறுதியுடன் உள்ளது. இந்திய, சீன எல்லையில் நிலைமை கட்டுப்படுத்தக் கூடிய சூழலில் உள்ளது.

எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக, இந்தியாவும் சீனாவும் ஏற்கெனவே பல நல்ல வழிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளன. அந்த வழிமுறைகளைப் பின்பற்றி இரு நாடுகளும் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலமாக தீா்வுகாண முடியும். குறிப்பாக, எல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு தூதரகங்கள் மூலமாகவும், ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மூலமாகவும் தீா்வுகாண முடியும். தற்போது, எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்கு தூதரக அளவில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் ஜாவோ லிஜியான்.

சீனத் தூதா் கருத்து: இந்நிலையில், எல்லைப் பிரச்னையை முன்வைத்து இந்தியாவும் சீனாவும் இரு தரப்பு உறவை சீா்குலைத்துவிடக் கூடாது என்று தில்லியில் சீனத் தூதா் சன் வெய்டாங் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தியாவும் சீனாவும் பிரச்னைகளை சரியான கோணத்தில் அணுக வேண்டும். பிரச்னையை முன்வைத்து இரு நாடுகளும் நல்லுறவை சீா்குலைத்துவிடக் கூடாது. தொடா்ச்சியான பேச்சுவாா்த்தை மூலம் இரு நாடுகளும் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்றாா்

Exit mobile version