சீனாவை வீழ்த்த எல்லைக்கு வரும் இந்திய இராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த திபெத் மக்கள்!

லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், சீன தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் இது வரை வெளியிடப்படவில்லை. சீன தரப்பலில் 100க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பார்கள் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கி சென்றார்கள்.

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த மூக்கையா மலைகளின் முகட்டை இந்தியா கைப்பற்றியது. இந்த சம்பவம் சீனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நிலைமை இப்படி சென்று கொண்டிருக்க சீனாவை மற்றொரு முறையில் மிரட்டியுளளது இந்தியா சீனாவின் எதிர்ப்பையும் மீறி, தென் சீன கடலில், இந்தியா ஒரு போர்க்கப்பலை நிறுத்தி உள்ளது. மேலும் அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகிலுள்ள மலாக்கா நீரிணையிலும் இந்திய போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து கவனித்து வருகிறது.

ANI செய்தி நிறுவனம் பதிவிட்ட ஒரு‌ வீடியோவில் சிம்லாவில் வசிக்கும் திபெத்திய சமூகத்தினர் இந்திய ராணுவத்தினரை உற்சாகப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதே போல் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த மோதலுக்குப் பிறகும் மணாலியில் இந்திய வீரர்களை திபெத்திய மக்கள் வரவேற்று உற்சாகப்படுத்தியதைக் காண முடிந்தது.

உலக அரங்கில் இந்திய வீரர்களின் தீரத்தையும் சீனாவின் ஏகாதிபத்திய போக்கை கண்டித்தும் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளித்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் சாணக்ய தனமும் நங்கள் தொடமாட்டோம் தொட்டால் விடமாட்டோம் என்ற கொள்கையும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது சீனாவின் அதிகார போக்கு திபெத் மக்களுக்கு அறவே பிடிக்கவில்லை. இதன் காரணமாக திபெத்திலிருந்து மறைந்து வாழும் திபெத் அரசாங்கம் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அரசும் சீனா திபெத்தை ஆக்கிரமித்துள்ள அராஜகத்திற்கு ஒரு முடிவ கட்டுமாறு இந்திய அரசாங்கத்தைக் கோரி வருகிறது.

Exit mobile version