“காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்” கோபாலபுரத்து வரலாற்றை ஒரே பேட்டியில் காலி செய்த அண்ணாமலை!

ஒன்றல்ல இரண்டல்ல 381 பாஜகவினர் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்த லில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.8 ஒன்றிய கவுன்சிலர்கள் 41 பஞ்சாயத்து தலைவர்கள். 332 வார்டு உறுப்பினர்கள்
ஆக மொத்தம் 381 மக்கள் பிரதிநிதிகள் பிஜேபி சார்பாக உள்ளாட்சி அமைப்புக்க ளில் மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறார்கள்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்னர் முன்னிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை பாஜக தலைமை அலுவகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அவர்கள் சரவெடி அதிரடியாக பதில் அளித்தார். திமுகவை பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். மேலும் சன் டிவி நிருபரை வச்சு செய்துவிட்டார். கிழித்து தொங்கவிட்டார்.

பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு. கல்யாணராமன் நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்யும் நோக்கம் என்ன? அது மிகவும் தவறான செயல் கல்யாணராமன் கைதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற நடவடிக்கையை பா.ஜ.க பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. ஆளும் கட்சியின் ஏவல் துறையாக காவல்துறை இருக்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்யாண ராமன் கைது செய்யும் நேரத்தில் காவல்துறை அதிகாரி பாஜகவின் மாநில செயலாளர் சுமதி வெங்கடேசனிடம் நடந்துகொண்டது மிகவும் தர குறைவான செயல் மேலும அந்த காவல்துறை அதிகாரி மீது தவறான முன்னுதாரணம் என்றும் அப்படி நடந்து கொண்ட காவல் அதிகாரி மீது பாஜக வழக்கு தொடர இருப்பதாகவும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் நிருபராக இருந்து கொண்டு பிரதமர் மோடியை விமர்ச்சித்தவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியும் அவர்கள் பதிவிட்ட கருத்துக்களை அவர்கள் வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பி வைக்கிறேன் நிருபர்களுக்கு செக் வைத்தார்.

பிரத்மர் மோடியை பற்றி நீங்கள் பேசியது கருத்து சுதந்திரம் என்றால் கல்யாணராமன் பேசியதும் கருத்து சுதந்திரமே. உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என நிருபர்களை பிரித்து மேய்ந்து விட்டார். மேலும் ஓத்த ஓட்டு பாஜக என போஸ்டர் போட்ட சன் டிவி தி.மு.கவின் தலைவர் பதவிக்கு கோபாலபுரத்தில் பிறந்தவர்வ்களை தவிர வேற யாரவது தலைவர் ஆகி விட முடியுமா என கேள்வி கேட்டு அதையும் போஸ்டர் போடுங்கள் என சம்பவம் செய்து விட்டார். அண்ணாமலை உடனே நிருபருக்கு டென்ஷன் ஏறி கொண்டது. அதையும் அண்ணாமலை விடாமல் அசால்ட் செய்து விட்டார்.

கோபாலபுரத்த பத்தி நான் பேசுனா ஏன் இவ்ளோ டென்சன் ஆவுறீங்க ப்ரதர்….? சன் டிவி உங்களுக்கு சம்பளம் குடுக்குது. நிருபர் வேலை செய்யுறீங்க… அத்தோட ஃப்ரீயா வுடுங்க ப்ரதர்… எதுக்கு டென்சன்… கோபாலபுரத்துலயா பொறந்தீங்க ? என கேட்டார்.

Exit mobile version