என்ன நடந்தாலும் டைட்டானிக் கப்பல் கேப்டன் போல் நிற்கின்றார் ராகுல் காந்தி..

அந்த மாதவராவ் சிந்தியா மபியில் பெரும் ஆளுமையாக இருந்து காங்கிரஸை காத்தார், ஆனால் அவரின் சகோதரி வசுந்தராதேவி சிந்தியா பாஜகவில் சேர்ந்து ராஜஸ்தான் முதல்வராய் இருந்து இன்னமும் பாஜகவின் துணை தலைவராக விளங்குகின்றார்

சிந்தியா எனும் குவாலியரின் மகாராஜா வாரிசுகளான இவர்களுக்கு வடக்கே ஒரு செல்வாக்கு உண்டு, மபி ராஜஸ்தான் பக்கம் காங்கிரஸ்க்கு இன்னும் கொரோனா பிடிக்காமல் இருக்க இவர்களும் ஒரு காரணம்

மாதவராவ் சிந்தியா விபத்தில் சாக அவரின் மகன் ஜோதிராடிட்ய சிந்தியா காங்கிரசுக்கு வந்தார், அவர் வந்தது கமல்நாத் கோஷ்டிக்கு பிடிக்கவில்லை

இது கடந்த தேர்தலிலே தெரிந்தது இதனால்தான் யார் முதல்வர் வேட்பாளர் என சொல்லாமலே ஆட்சிக்கு வந்தது காங்கிரஸ்

இப்பொழுது கமல்நாத் எல்லா அதிகாரத்தையும் தானே வைத்துகொள்ள முயன்றபொழுது இந்த ஜூனியர் சிந்தியாவுக்கும் அவருக்கும் முட்டிகொண்டது

ஜூனியர் சிந்தியாவினை அத்தையுடன் சேர்த்து கொத்திகொண்டு போய்விட்டது அமித்ஷா கோஷ்டி

அட நாடே குடியுரிமை சட்டம் கலவரம் என இருந்தபொழுது அமித்ஷா இவரை கொத்துவதிலே இருந்திருக்கின்றார், போராளிகளுக்கு இதை விட அவமானம் ஏதும் இருக்கமுடியாது

ஆக காஷ்மீர், குடியுரிமை என சம்பந்தமில்லாமல் ராகுல் பல்டி அடித்துகொண்டிருக்கும் பொழுது மிக தந்திரமாக காங்கிரஸில் இருந்து ஒரு செங்கல்லை உருவிவிட்டார் அமித்ஷா

இனி மத்தியபிரதேச அரசு கவிழும், பாஜக உடனே தேர்தலை நடத்தாது கொஞ்ச நாளைக்கு குடியரசு தலைவர் ஆட்சி என அவர்களே ஆளுவார்கள்

காங்கிரஸ் தன் வழக்கமான கோஷ்டி பூசலாலும், ஒவ்வொருவரும் சிற்றரசர் நினைப்பில் இருந்து இன்னும் வெளிவராததாலும் தமிழ்நாட்டை போல வடக்கேயும் அழிகின்றது

இல்லை இந்தியாவில் இருந்தே விடைபெறுகின்றது

தமிழகத்தில் வாசன் எனும் ஜமீன் பரம்பரை வடக்கே சிந்தியாவின் பரம்பரை என காங்கிரசை தன்னுள் இழுத்து வேகமாக வளர்கின்றது பாஜக..

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version