இதுவரை 5 பாஜக கூட்டணியில் அடுத்தடுத்து இணையும் கட்சிகள்….

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை நோக்கி சில அரசியல் கட்சிகள் நகரத் தொடங்கியுள்ளன.

ஒரு பக்கம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தை இழுபறியாக நடந்த வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் இணைய பல கட்சிகள் யோசிக்கும் நிலையில்,

பாஜக கூட்டணியில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்த நிலையில் நேற்று மாலை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் உடன் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்தன் மேனன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய உள்ளார்.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழக பாஜக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ,ஏசி. சண்முகத்தின் புதிய நீதி கட்சி, தேவநாதன் யாதவ் தேசிய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், திருமாறன் தலையிலான தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணி இருக்கும் நிலையில் பல்வேறு அமைப்புகளும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்,

மேலும் கூட்டணியை வளர் சேர்க்கும் விதமாக, பாமக, தேமுதிக, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி, டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இது மட்டுமின்றி பிரதமர் வருகையின் போது பல அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைய உள்ளதும் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version