காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றியவரை தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
“தமிழக கவர்னராக ஆர்.என்ரவி நியமிக்கப்பட்ட போதே தமிழக ஆளுங்கட்சிக்கு சவாலாக இருப்பார் என்று கூறப்பட்டது. அதையொட்டித்தான், ‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த அறிக்கையை அந்தந்த துறை செயலர்கள் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று தலைமை செயலாளர் எழுதிய கடிதம் அரசியலாக மாறியது. இது வழக்கமான அரசு நடைமுறைதான். இதை அரசியலாக்க வேண்டாம்’ என்று தலைமைச் செயலாளர் சொன்ன பின்னரே பிரச்னை தணிந்தது.
அடுத்து, தமிழக பல்கலை துணைவேந்தர்களை அழைத்து ஆளுநர் ஆலோசனை செய்ததை விமர்சிக்க துவங்கினர். பல்கலை வேந்தரான அவர் துணை வேந்தர்களை அழைத்து ஆலோசிப்பது ஒரு குற்றமா? எனும் கேள்வி எழுந்த பின் சற்றே அமைதியானார்கள்.
ஆனால், இப்போது கவர்னர் செய்திருக்கும் ஒரு செயலுக்கு திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதாவது, திமுக அரசு எதிர்க்கும் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை. உள்ளிட்டவற்றுக்கு கருத்தியல் ரீதியில் கடும் ஆதரவை தரும் அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பால குருசாமிக்கு திடீர் பொறுப்பு ஒன்றை ஆளுநர் வழங்கியுள்ளார். அதாவது. மதுரை காமராஜர் பல்கலைக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழுவின் தலைவராக அவர் கவர்னரால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதான் திமுகவை கடுமையாக அப்செட்டாக்கியுள்ளது. உள்ளூர அவர்கள் பொங்கத் துவங்கியுள்ள நிலையில், கவர்னரின் அடுத்த மூவ் அவர்களை வெளிப்படையாக புலம்ப வைத்துள்ளது.
அதாவது தமிழக டிஜிபிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த 6ம் தேதி ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தனது வாகனப் பயணத்தின் போது பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார். இதன் உண்மையான அர்த்தம், விரைவில் ஆளுநர், அதிரடியாக தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு ஆய்வு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பதுதானாம். இந்த விஷயம்தான் தி.முகவுக்கு கலக்கத்தை உருவாக்கியுள்ளது”