பல் இளித்த பகுத்தறிவு ! மழையை நிறுத்த திமுகவினர் தேங்காய் வழிபாடு !

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தி.மு.க., நிகழ்ச்சிக்கு இடையூறாக பெய்த மழையை நிறுத்த அக்கட்சியினர் தேங்காய் வழிபாடு நடத்தியது நகைப்புக்கு ஆளாகியுள்ளது.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்ட ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பெண்கள் கபடி போட்டி நடத்தப்பட்டது. 2வது நாள் மழை பெய்ததால் போட்டி 3வது நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 12 அன்றும் தொடர்ந்து மழை பெய்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் சூழல் உருவானது.

இதனால் தி.மு.க.,வினர் பயந்து போய் மழையை நிறுத்த பாரம்பரிய வழக்கப்படி தேங்காய் வழிபாடு செய்து நிகழ்ச்சி நடக்கும் கூரைக்கு மேல் தேங்காயை தூக்கிப் போட்டனர்.திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்போது மழை வருவது போல் இருந்தால் ஒரு தேங்காயை எடுத்து வருண பகவானை வேண்டி கூரையில் போட்டு விட்டால் அன்று மழை பெய்யாது என்பது தமிழகத்தில் பரவலாக நம்பப்படும் விஷயம்.

இந்நிலையில் ஊருக்கு ஊரு பகுத்தறிவு பேசும் தி.மு.க.,வினரே இந்த வழிபாட்டை நடத்தி மழையை நிறுத்த முயன்றது நகைப்புக்கு உள்ளாகி வருகிறது. தி.மு.க.,வினரின் வேண்டுதல் பலித்ததோ என்னவோ வழிபாட்டுக்கு பிறகு மழை நின்று நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டது.இதற்கிடையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருந்த சமயத்தில், தி.மு.க.,வினர் சுயநலமாக சிந்தித்து தங்கள் கட்சி நிகழ்ச்சி நடைபெற மழை வேண்டாம் என்று பூஜை நடத்தியது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Exit mobile version