அடுத்த இலக்கை நோக்கி இஸ்ரோ நிலவிற்கு மனிதன்.. விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் பணிகளை தொடங்கியது இந்தியா..

research station in space isro

research station in space isro

இஸ்ரோவால் உருவாக்கப்படும் விண்வெளி நிலையம் 2035-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2040 ஆம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும். என இஸ்ரோ விஞ்ஞானிகள கூறியுள்ளார்கள்

மெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை ஏற்படுத்தி உள்ளன. அதேபோல் சீனாவும் தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளது. இதேபோன்று 3-வதாக இந்தியாவும் தமக்கு சொந்தமான விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு பணியில் இறங்கி உள்ளது.

விண்வெளியில் இந்த நிலையத்தை அமைக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளது. இதற்கான பணிகள் ஒவ்வொரு கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. முழுமையான திட்ட அறிக்கைகள் எல்லாம் விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகிறது.

இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு, 2035-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த திட்டம் தொடர்பான கருத்துருவாக்க கட்டத்தில் உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறி உள்ளார். மேலும் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்.

இந்தியா சார்பில் விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2040 ஆம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும். சந்திரயான் மூன்று செயற்கைக்கோள் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. அந்த செயற்கைக்கோள் எந்த நோக்கத்திற்காக விண்ணில் செலுத்தப்பட்டதோ அந்த நோக்கம் வெற்றி அடைந்ததாக கூறினார்.

Exit mobile version