அமித்ஷா ஆட்டம் ஆரம்பம் டெல்லியில் கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு டில்லி அரசு ஒப்புதல்!

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினார் இதனை தொடர்ந்து கன்னையா குமார் மீது தேச துரோக வழக்கு தொடர அனுமதி கேட்டு டில்லி அரசிடம், டில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் அனுமதி கேட்டிருந்தனர். இது நிலுவையில் இருந்தது. அனுமதி தராமல் இழுத்து வந்த கெஜ்ரிவால் அரசு. உயர்நீதிமன்றம் மீண்டும் டெல்லி அரசிற்கு நினைவூட்டுங்கள் என காவல்துறையிடம் அறிவுறுத்தியது. மீண்டும் கெஜ்ரிவாலுக்கு நினைவூட்டியது காவல்துறை

டெல்லி கலவரம். உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தொடர்பு . பயங்கரவாதிகளுக்கு ஆதரவு என கெஜ்ரிவால் மீது கடந்த 10 நாட்களில் கெஜ்ரிவாலின் இமேஜ் ,முழுவதும் உடைந்து விட்டது . அங்குள்ள இந்துக்கள் யோசிக்க தொடங்கி விட்டார்கள். அது மட்டுமில்லாமல் இதே போக்கை கெஜ்ரிவால் கடைபிடித்தார் என்றால் குடியரசு தலைவர் ஆட்சிஅங்கு அமல்படுத்தும் நிலை உருவாகிவிடும் என்ற நிலை தில்லியில் உருவானது.

இந்த நிலையில் இதனையடுத்து, டில்லி காவல்துறை சிறப்பு பிரிவினர், கடந்த வாரம் கன்னையா குமார் மீது தேச துரோக வழக்கின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்கும்படி ஆம் ஆத்மி அரசுக்கு மீண்டும் கடிதம் அனுப்பினர்.இதனை ஏற்று கொண்ட டில்லி அரசு, கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளது. டில்லி அரசின் அனுமதியை தொடர்ந்து, இந்த போராட்டத்தில் பங்கேற்ற உமர்காலித், அனிர்பன்பட்டாச்சார்யா, அகிப் உசேன், உமர் குல் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்படும்.

இது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டளை என்றும் அதற்குத்தான் கெஜ்ரிவால் அடிக்கடி அமித்ஷா அவர்களை சந்தித்து ஆலோசனையின் படி தற்போது நடந்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version