தெய்வமாக கருதக்கூடிய சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்தது மிகவும் கண்டனத்துக்குரியது- அர்ஜுன் சம்பத்

பாரத அன்னையின் தவப்புதல்வியான பூமிபுத்ரி சீதா தேவியையும், ஆண்டாள் நாச்சியார் போல வணங்க வேண்டிய பெண்களை கொலை செய்வது மிகவும் வருந்தத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ எனும் 14 வயது பெண் குழந்தையை கொடூறமான முறையில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது மிகவும் கண்டனத்திற்குறியது.


இந்த செயலை இந்து மக்கள் கட்சி – தமிழகம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த பாதக செயலை செய்த அதிமுக முன்னால் கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 452, 351, 342, 284B, 323, 324,307, மற்றும் Womens Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஜெயஸ்ரீ இறப்பிற்க்கு காரணமான இந்த கொடூறர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு அரசாங்கம் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் கொலையாளிகளின் சொத்துக்களை ஜப்தி செய்து 50 லட்சம் வழங்க வேண்டும், அந்தளவு சொத்து இல்லாத பட்சத்தில் அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்.
கொலையாளிகளின் குடும்பத்தில் யாரேனும் அரசுப்பணியிலிருந்தால் அவர்களது வேலையும் பறிக்கப்பட வேண்டும் .

அர்ஜூன் சம்பத்
நிறுவன தலைவர்
இந்து மக்கள் கட்சி – தமிழகம்

Exit mobile version