ட்விட்டரில் ட்ரெண்ட் கோவையை புறக்கணிக்க வேண்டாம்! #DontBoycottCoimbatore

தமிழகத்தில் 13 லட்சத்திற்கும் மேல் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இருந்தும், கடந்த 2 நாட்களாக கோவையில் ஒருவருக்கு கூட தடுப்பூசி போடப்படவில்லை என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று கூறி இருந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது,.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது “கடந்த இரண்டு நாட்களாக கோவையில் ஒரு தடுப்பூசி கூட போடப்படவில்லை. எப்பொழுது கிடைக்கும் என்றும் தெரியவில்லை. உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ என தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன். இந்த தகவல் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதால் திமுக அரசு பழி வாங்குகிறது என சமூக வலைதளைங்களில் பரவி வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன், கோவிஷீல்டு தடுப்பூசிகள் 43 ஆயிரம், கோவாக்சின் 7 ஆயிரம் டோஸ், கோவைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், இரண்டு நாட்களாகியும் இந்த தடுப்பூசி மருந்துகள், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது

இதனை தொடர்ந்து ட்விட்டரில் கோவையை புறக்கணிக்க வேண்டாம்! #DontBoycottCoimbatore என்ற ஹாஷ்டக் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Exit mobile version