மக்கள் ஆதரவுடன் ராம ராஜ்யத்தை நிறுவுவோம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்பேசியதாவது ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில், தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பா.ஜ., சார்பில் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: சனாதன தர்மத்தை எதிர்க்கட்சிகள் அழிக்க நினைக்கிறார்கள். அவர்கள் ஹிந்துக்களை அவமதித்து அரசியல் சட்டத்தை நசுக்க நினைக்கிறார்கள். இப்போது பத்திரிக்கையாளர்களை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். பயத்தினால் அவர்கள் எங்கள் மீது புகார் கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் அரசுக்கு வருவாயைப் பெருக்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ராஜஸ்தானில் பா.ஜ., நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றதும், ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத மாநிலமாக ராஜஸ்தானை மாற்றுவோம். மக்கள் ஆதரவுடன் ராம ராஜ்யத்தை நிறுவுவோம். இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.பேசினார்.

Exit mobile version