இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் இலவசம் அமெரிக்க அதிபர் டிரம்ப்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை தும்சம் செய்து விட்டது. 86 ஆயிரம் மக்களை காவு வாங்கியுள்ளது இந்த கொரோனா. இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா சில நாட்களாக வேகமெடுத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா குறித்து சில பதிவுகளை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரி்ல் பதவிவேற்றியது,
பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்குத் தெரியும். கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும். கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியை வீழ்த்த இந்தியாவிற்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும்.

இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன். தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது. இந்திய-அமெரிக்கர்களை “சிறந்த” விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள். இவ்வாறு டிரம்ப் பதவிவேற்றியுள்ளார்.

Exit mobile version