நேற்று சரஸ்வதி மற்றும் பஹ்ராய் மாவட்டங்களில் 611 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை துவக்கி வைத்து பேசிய முதல்வர் யோகி பேசுகையில் பாஜக ஆட்சியில் எந்த ஒரு கலவரத்தையும் உருவாக்க நாங்கள் விட வில்லை.
இனி வரும் காலங்களில் கலவரங்களை உருவாக்க நினைத்தால் கலவரக்காரர் களின் ஏழு தலைமுறை அதற்கான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் இது என்னுடைய எச்சரிக்கை என்று உத்தரப் பிரதேச தேர்தலை முன் வைத்து கலவரங்களை உருவாக்க காத்திருக்கும் கும்பல்களுக்குஎச்சரிக்கை அளித்து இருக்கிறார் முதல்வர் யோகி
பாஜகவின் அரசியல் ஸ்டிரடேஜியை பார்த்தால் மிகத் தெளிவாக இருக்கும் வாஜ்பாய் வளர்ச்சியை மட்டும் பேசும் ஒரு மிதவாத இந்துத்வா அரசியல்வாதியாக இருந்தார். அத்வானி இந்துத்வா வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு ஹார்ட் கோர் இந்துத்வா பாலிடிக்சை கடை பிடித்தார். அதே ஸ்டிரேடஜியை தான் இப்பொழுது மோடி மற்றும் யோகி கொண்டு செல்கி றார்கள்.மோடி வளர்ச்சி என்கிற பெயரில் அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒரு மிதமான இந்துத்வா அரசியலை எடுத்து செல்கிறார்.
யோகி இந்துத்வா சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்கும் ஹார்ட்கோர் இந்துத்வா அரசியலை அற்புதமாக செய்து கொண்டு இருக்கிறார். இந்த இரட்டை ஸ்டிரே டஜி தான் பிஜேபியை வருகின்ற சட்டமன் ற தேர்தலில் வெற்றி பெற வைக்க போகிறது.
மோடி உத்தர பிரதேசத்தில் தன்னை பிர தமராக தேர்ந்தெடுத்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பணிகளை செய்து இருக்கிறார். யோகி முதல்வராக இருந்து கடுமையான முறையில் இந்துத்வா அரசியலை கையில் எடு த்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியிருக்கிறார்.
அதனால் தான் இது வரை வந்த அனை த்து கருத்து கணிப்புகளும் உத்தரபிரதேசத்தில். அடுத்து வருவதும் பிஜேபி ஆட்சி யே என்று கூறி வருகின்றன.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யோகி அயோத்தி மற்றும் கோரக்பூர் என்று 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட இருக்கிறார்.
யோகி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றால் உத்தரபிர தேச அரசியல் வரலாற்றில் தொடர்ந்து 2 வது முறையாக பதவியில் இருந்த ஒரே முதல்வர் என்கிற வரலாற்றை படைப்பார்.யோகி இனி கலவரம் செய்ய நினைத்தால் அவர்களின் 7 தலைமுறையை அத ற்கான விலைகொடுக்கும் படி செய்வேன் என்று கூறியிருப்பது உத்தர பிரதேச ஹார்ட் கோர் இந்துத்வாதிகளையும் தேச பக்தர்களையும பரவசமாக்கி இருக்கிறது
உத்தர பிரதேச வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 2 வது முறையாக பதவியேற்ற முதல் முதல்வர் என்கிற பெயரை யோகி பெறுவார் என்பது உறுதி..