பிரதமர் மோடி குறித்து அவதூறு..சென்னை நபரை சென்னையில் தட்டி தூக்கிய உத்திரபிரதேச போலீசார்!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பிய நபரை, சென்னையில் வீடு புகுந்து உத்தரபிரதேச காவல்துறை கைது செய்தனர். நமது நாட்டின் தேச தலைவர்கள் மற்றும் நாட்டின் உயரிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவிப்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. கருத்துரிமை என்ற பெயரில் பொய்யான செய்திகளை பரப்புவது தவறு.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆத்யநாத் குறித்து பொய் செய்திகளையும் அவதூறு கருத்துக்களையும் சென்னையில் வசித்து வரும் மன்மோகன் மிஸ்ரா (60) என்பவர் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் கோத்வாலி காவல்துறை , உடனடியாக சென்னைக்கு விரைந்து, மாதாவரத்தில் தங்கியிருந்த மன்மோகன் மிஸ்ராவை கைது செய்தனர்.மேலும் அவரை விசாரணைக்காக தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்த உத்தரபிரதேச போலீசார், ஜான்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

இந்த கைது நடவடிக்கை தொடர்பாக தமிழக காவல்துறைக்கு உத்தரபிரதேச காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக காவல்துறை கூறுகையில், “கைது செய்யப்பட்ட மன்மோகன் மிஸ்ராவின் சொந்த ஊர் உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர். கடந்த 30 ஆண்டுகளாக மாதாவரத்தில் தங்கி வருகிறார். இங்கு வடமாநில தொழிலாளர்களுக்கான ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் என்ன பேசினார் என்பது தங்களுக்கு தெரியாது. காரணம், அந்த வீடியோ இந்தியில் உள்ளது,” என்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் தமிழக அரசு குறித்து அவதூறு பேசியதாக சமூக ஆர்வலர் மாரிதாஸ் பாஜக ஐ.டி விங் பிரமுகர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு குறித்து அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் பாஜக தலைவர் அளித்த பேட்டியில் பிரதமர் குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது இந்தியாவில் எந்த மூலையிலும் வழக்கு பதிவு செய்து அவர்களை அந்த மாநிலகாவல்துறை கைது செய்யும் அதிகாரம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

திமுகவினர்‌ ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்‌ சி ஆர்‌ பி சட்டம்‌ தமிழகத்திற்கு மட்டுமான சட்டமல்ல…. பாரதிய ஜனதா கட்சி 17 மாநிலங்களில்‌ ஆட்சியில்‌ இருக்‌கிறது அனைத்து மாநிலங்களிலும்‌ இந்த சிஆர்பிசி சட்டம்‌ செல்லும்‌. என்றும் கூறியிருந்தார் அண்ணாமலை. இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக, உத்தரபிரதேச போலீசார், சென்னைக்கு வந்து ஒருவரை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version