தவறு செய்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல், தட்டிக் கேட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவரை கைது செய்வதா?தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், இந்துக்களை இழிவாக பேசியது, இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆ.ராசா எம்.பி.யாக உள்ள, நீலகிரி மக்களவைத் தொகுதியில், ‘இந்து முன்னணி’ அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால், தங்களது இந்து விரோத முகம் அம்பலப்பட்டு போனதை தாங்கிக் கொள்ள முடியாத விரக்தியில், கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி அவர்களை தி.மு.க. அரசு கைது செய்ததுள்ளது.மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய, ஆ.ராசாவை கைது செய்யாமல், பெயரளவுக்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், அதற்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க. மாவட்டத் தலைவரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாத, பாசிச அரசு என்பதை இதன் மூலம் மீண்டும் ஒருமுறை தி.மு க. நிரூபித்திருக்கிறது.தி.மு.க.வினர் வாயை திறந்தாலே, ஜனநாயகம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் பற்றி வகுப்பெடுப்பார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எதிர் கருத்து சொன்னாலே கைது செய்து, அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க.வின் இந்த அதிகார மிரட்டலுக்கு பா.ஜ.க. ஒருபோதும் அஞசாது. கைது செய்யப்பட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அவர் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பாசிச தி.மு.க. அரசை எதிர்த்து பா.ஜ.க. தொடர்ந்து போராடும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















